Show all

மக்களை நாயாக அலைய விட்ட மோடி, குஜராத்தில் வெற்றி பெற காலில் விழாத குறையாக கெஞ்சுகிறார்.

13,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119 பா.ஜ.க. தலைவர் அமித் ஷா மகனுக்கு எதிராக ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரசார் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.

சமீபத்தில் தனது கீச்சு பக்கத்தில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்திருந்த காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, ‘பேரரசர் அமித் ஷாவின் மகன் இளவரசர் ஜெய்ஷாவின் வருமானம் சில ஆண்டுகளில் பல மடங்காக அதிகரித்தது மற்றும் ரபேல் போர் விமானம் வாங்குவதில் நடந்த ஊழல் தொடர்பாக நான் கேட்ட கேள்விகளுக்கு திருவாளர் மோடி பயந்து விட்டார். அவரது உதடுகள் ஒட்டிக் கொண்டன. முகம் சுருங்கி விட்டது. நெற்றியில் வியர்வை வழிந்தோடுகிறது என்னும் பொருள்பட குறிப்பிட்டிருந்தார்.

 

இந்நிலையில், சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கியுள்ள குஜராத் மாநிலம், பவ்நகர் மாவட்டம், பாலிட்டானா பகுதியில் இன்று நடைபெற்ற பா.ஜ.க. தேர்தல் கருத்துப் பரப்புதல் கூட்டத்தில் பங்கேற்று பேசிய மோடி,

தானும் தன் கூட்டத்தாரும் பரிதாபமான ஏழைகள் என்றும் ராகுல் காந்தி தங்கக் கரண்டியோடு பிறந்தவர் என்றும்,

தங்க கரண்டியுடன் பிறந்தவர் என்பதால் தங்கள் கூட்டத்தின் வலியும், வியர்வையின் மதிப்பும் என்னவென்று எந்த காலத்திலும் புரிந்துகொள்ள முடியாது என்றும்,

மக்களை நள்ளிரவில் நடுத்தெருவில் நாயாக அலைய விட்ட மோடி, நாளைய தலைமை அமைச்சரைத் தீர்மானிக்கிற தேர்தல் குஜராத் தேர்தல் என்பதால், காலில் விழாத குறையாக கெஞ்சிக் கூத்தாடுகிறார் மோடி குஜராத் மக்களிடம். குஜராத் மக்கள்;;; ஏமாறுவார்களா?

- தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,621

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.