சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சச்சின் பயன்படுத்திய 10 ஆம் எண் ஜெர்சிக்கு ஓய்வு கொடுக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. சச்சின் ஒருநாள் போட்டியில் இருந்து ஒய்வு பெற்றதில் இருந்து அவரது ஜெர்சி எண்ணை யாரும் இதுவே பயன்படுத்தாமல் இருந்தனர். ஆனால் கடந்த ஆகஸ்ட் மாதம் கொழும்புவில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதன்முறையாகக் களமிறங்கிய இந்திய வீரர் ஷர்துல் தாகூர் 10 ஆம் எண் ஜெர்சியை பயன்படுத்தினார். இது சச்சினின் ரசிகர்கள் பலராலும் கிண்டல் செய்யப்பட்டதால் ஷர்துல் தாக்கர் 10-ம் எண் ஜெர்சி வேண்டாம் என இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் முறையிட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் இதுகுறித்து ஷர்துல் விளக்கமளிக்கையில், 'நியூமராலஜிக்காக தான் இந்த எண்ணை நான் உபயோகம் செய்தேன்' என கூறியுள்ளார். அதேபோல் மேலும் பல இளம் வீரர்களும் 10-ம் எண் ஜெர்சி அணிந்து விளையாட மறுப்பு தெரிவிப்பதாகச் சொல்லப்படுகிறது. இதனால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சச்சின் பயன்படுத்திய 10 ஆம் எண் ஜெர்சிக்கு ஓய்வு கொடுக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் செய்யாமல் அப்படியே 10-ம் எண் ஜெர்சி ஒதுக்கப்பட்டுவிடும் என்றும் கூறப்படுகிறது. இதனால் சர்வதேச கிரிக்கெட்டில் இனி எந்த இந்திய வீரரும் 10-ம் எண்ணை பயன்படுத்த முடியாது. கால்பந்து, என்பிஏ கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளில் ஜாம்பவான்கள் ஓய்வு பெறும்போது, அவர்கள் அணிந்து விளையாடிய ஜெர்சி எண்ணுக்கும் ஓய்வு அளிப்பது வழக்கம். ஆனால் அந்த போட்டிகளிலும் கிளப் அணிகளில் மட்டுமே அவ்வாறு செய்யப்படும். எந்த ஒரு சர்வதேச அணிகளும் செய்ய இயலாது. மேலும் இதற்கு முன்பே மும்பை இந்தியன்ஸ் அணி அதிகாரப்பூர்வமாக சச்சினின் ஜெர்சி எண்ணிற்கு ஓய்வு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



