08,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஒரு லட்சம் பனங்கன்றுகள் நடும் திட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையை அடுத்த நெடுங்குன்றம் பகுதியில் பனங்கன்றுகள்; நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழர்களின் அடையாளமான பனை மரத்தை இன்று 50, 100 ரூபாய்க்கு விற்பனை செய்யும் நிலை உள்ளது. பனை மரத்தின் அருமை தெரியாமல் இளைய தலைமுறையினர் உள்ளனர். ஒரு கிணற்றை சுற்றி பனைமரங்கள் இருந்தால் தண்ணீர் வற்றாது என்று நம்மாழ்வார் கூறி இருக்கிறார். இதனை உணர்த்தும் வகையிலேயே பசுமை திட்டமான இதனை நாம் தமிழர் கட்சி கையில் எடுத்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து 5 ஆயிரம் பனங்கன்றுகள் வாங்கி வந்துள்ளோம். இதனையும் நட்டுள்ளோம். புளி, வேம்பு, பூவரசு, புங்கை மரக் கன்றுகளையும் நட்டுள்ளோம். கருணாஸ் சாதி உணர்வை தூண்டிய குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்டுள்ளார் என்றால், எச்.ராஜா மத உணர்வை தூண்டும் வகையில் பேசவில்லையா? காவல்துறை அதிகாரியை தரக்குறைவாக பேசியதாக கருணாஸ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எச். ராஜா அவரைவிட கூடுதலாகப் பேசினாரே. கருணாசை கைது செய்தது போல எச்.ராஜாவை ஏன் கைது செய்யவில்லை. எச்.ராஜா அதிகாரத்தில் இருக்கும் கட்சியின் தேசிய செயலாளர் என்பதால் தமிழக அரசு கைவைக்க தயங்குகிறது. இவ்வாறு சீமான் கூறினார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,920.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



