Show all

முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார் ஜெட்லி! ரபேல் போர் விமானப் பேச்சால், தேச நலனுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறாராம் ராகுல்

14,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரபேல் போர் விமானக் கொள்முதலில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். நடுவண் அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டபோதும் இந்தப் பிரச்சனையை ராகுல்காந்தி எழுப்பினார்.

இந்தநிலையில் ராகுல் காந்திக்கு பதில் அளிக்கிறேன் என்று கிளம்பி, நடுவண் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தனது முகநூல் பக்கத்தில், முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயன்றிருக்கிறார். 

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான ராகுல் காந்தியி;ன் கருத்துப் பரப்புதல், இரு அரசுகளுக்கு இடையேயான ஒப்பந்தத்தில் கேள்வி எழுப்புவதன் அடிப்படையில் தேச நலன்களில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது ஆகும் என்கிறார் ஜெட்லி.

ரபேல் போர் விமான சர்ச்சை, முழுக்க முழுக்க தவறான தகவல்கள் அடிப்படையிலானதாம். தேசிய அரசியல் கட்சிகளிடமும், அவற்றின் பொறுப்பு வாய்ந்த தலைவர்களிடமும் பொதுவெளியில் ராணுவ பரிமாற்றங்கள் பற்றி பேசுவதற்கு முன்பாக ராகுல் காந்தி யோசிக்க வேண்டுமாம்.

இந்த ரபேல் போர் விமான சர்ச்சையைக் கிளப்புவதால் ராகுல்காந்தியும், காங்கிரசும் குற்றவாளிகள் ஆகின்றனராம்.

ஒப்பந்தத்தில் கூறப்பட்டு உள்ள ரகசியம் காக்க வேண்டும் என்ற விதிமுறை ஜெட்லியைக் கட்டுப்படுத்துகிறதாம். ஜெட்லி என்ன கேட்டாலும் அல்லது பதில் அளித்தாலும் அது அந்த வரம்புக்கு உட்பட்டது ஆகிறதாம்.

ராகுல் காந்தி, ரபேல் போர் விமான சர்ச்சை குறித்த பேச்சில், ஒரு விமானத்தின் விலையை ரூ.520 கோடி என்றும் ரூ.540 கோடி என்றும் மாற்றி மாற்றிக் கூறுகிறாhரம். 

ராகுல் காந்தியின் தவறான போக்கு, தேச நலன்களை பாதிக்கும் என்பதால்தான் ஜெட்லி இந்தக் கேள்விகளை கேட்டு முகநூல் பதிவை வெளியிடுகிறாராம். உடனடியாக ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும் பதில் அளிப்பார்கள் என்று நான் நம்புகிறேன் என்று முடித்திருக்கிறார் முகநூல் பதிவை முடித்திருக்கிறார் ஜெட்லி.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,895.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.