ரேடார் குறித்து மிகத்தவறான கருத்தை வெளியிட்டு, இணையத்தால் நையாண்டிக் குள்ளான மோடி தற்போது வேறு ஒரு புளுகு மூட்டை அவிழ்த்து விட்டு இணையத்தாரின் பரிகாசத்தை வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார். 30,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: புல்வாமாவில் துணைஇராணுவத்தினர் கொல்லப்பட்டத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாகப் பாகிஸ்தானின் பால்கோட் பகுதியில் இந்திய விமானப்படைத் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் ஜெயிஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த பலர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது. இது பற்றி நியூஸ் நேஷன் என்ற ஊடகத்துக்குப் பேட்டியளித்திருந்த மோடி, 'பால்கோட்டில் தாக்குதல் நடத்தப்பட்ட அன்றைய நாளில் வானிலை சற்று மோசமாக இருந்தது. தாக்குதலை வேறு நாள் வைத்துக்கொள்ளலாம் என வல்லுநர்கள் தெரிவித்தனர். ஆனால், நான்தான் மேகங்கள் நம்மை ரேடார்களின் பார்வையிலிருந்து காக்கும் என அறிவுறுத்தினேன்' என்று பேசியிருந்தார். ஆனால், மோடி கூறியது தவறான கருத்து என்பதால் அவரை இணைய ஆர்வலர்கள் சரமாரியாகக் கலாய்த்து வருகின்றனர். இதற்கிடையில் அதே பேட்டியில் மோடி வேறு ஒரு கருத்தையும் தெரிவித்துள்ளார். தற்போது அதுவும் தீயாகி வருகிறது. அதில், '1987-88-ம் ஆண்டுகளில் நான் எண்ணிம படக்கருவி பயன்படுத்தினேன். அந்த நேரத்தில் அத்வானியின் கருத்துப் பரப்புதல் நடைபெற்றுக்கொண்டிருந்தது. என்னிடம் இருந்த எண்ணிமப் படக்கருவியில் அத்வானியைப் படம் பிடித்து அதை மின்அஞ்சல் மூலம் டெல்லிக்கு அனுப்பினேன். அதைப் பார்த்த அத்வானி மிகவும் பிரமிப்படைந்தார். எவ்வாறு இந்தப் புகைப்படத்தை வண்ணமாக எடுத்தாய் என என்னிடம் கேட்டார்' இவ்வாறு பேசியுள்ளார். இதிலும் மோடி தவறான கருத்தையே குறிப்பிட்டுள்ளார் என சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். 1973-ம் ஆண்டு அமெரிக்காவின் பாதுக்காப்புப் படையினர்தான் முதல்முதலாக மின்அஞ்சலைப் பயன்படுத்தினர். அது அவர்களுக்குள்ளே சிறிய அளவிலான பரிமாற்றமாக இருந்தது. பிறகு, 1990 முதல் 1995-ம் ஆண்டுகளில் இணையதளம் வெளியான பிறகு, பொதுமக்களும் மின்அஞ்சல் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். ஆனால், அது தொடங்கப்படுவதற்கு முன்பே மோடி எப்படி அதைப் பயன்படுத்தியிருக்க முடியும் என கடுமையாக விமர்சித்து வருகின்றனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,151.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.