Show all

என்னங்கடா இது போங்காட்டமா இருக்குது! தொடர்வண்டித் துறையில் விபத்து ஏற்படக் காரணமாகிறதாம்; தமிழில் பேசுவது

தமிழகத்தில் குவிக்கப்பட்ட வடமாநிலத்தவருக்கு வசதியாக, தமிழில் பேச தடை விதித்துள்ளது தென்னகத் தொடர்வண்டித் துறை.

30,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: வட மாநிலத்தவர் பெருமளவில் தொடர்வண்டித் துறை பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதால் அவர்களுக்கு வசதியாக இனி தாய்மொழியில் பேசக் கூடாது என்றும், ஆங்கிலத்தில், தான் பேச வேண்டும் என்றும் தொடர்வண்டித் துறை உத்தரவிட்டுள்ளது. 

மதுரை திருமங்கலம் அருகே இரண்டு தொடர்வண்டிகள் ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே வந்ததால் மோதி பெரும் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இதற்கு ஒரு நிலையப் பொறுப்பாளர் தமிழில் பேசியதை, மற்றொரு வடமாநில நிலையப் பொறுப்பாளர் புரிந்து கொள்ளாததே விபத்து ஏற்படும் சூழலுக்கு காரணம் என்பதை தொடர்வண்டித் துறை அதிகாரிகள் காரணம் காட்டியுள்ளனர். 

தற்போது தமிழகத்தில் தொடர்வண்டித்துறை வேலையில் பெருமளவு வடமாநிலத்தவர்கள் குவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு ஹந்தி அல்லது ஆங்கிலம் மட்டுமே தெரியும் என்பதால், இனி அனைத்து நிலையப் பொறுப்பாளர்கள் உள்பட பணியாளர்கள் தாய்மொழியில் பேசக்கூடாது என்றும் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என தொடர்வண்டித் துறை தலைமை நிர்வாக மேலாளர் அனந்தராமன் உத்தரவிட்டுள்ளார். 

இதுதொடர்பாக திருச்சி, மதுரை, சேலம், திருவனந்தபுரம், மற்றும் பாலக்காடு கோட்ட மேலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். இதன் மூலம் வடமாநிலத்தவருக்கு வசதியாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தமிழ் தெரியாமல் எந்த தொடர்வண்டித்துறை பணியாளர்களும் தமிழகத்தில் வேலை பார்க்க முடியும் என்ற சூழல் இருப்பது மேலும் உறுதிப் படுத்தப் படுகிறது. 

என்னங்கடா இது போங்காட்டமா இருக்குது! எங்கடா போய் முடியப் போவுது இது?

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,151.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.