Show all

உடனடியாக மிடுக்குப்பேசிகளை எடுத்துக்கொள்ள புதுவகை இயந்திரம்! சியோமி ஏற்பாடு

சியோமியின் புதிய யுக்தியான மிடுக்கு பேசி விற்பனை இயந்திரங்கள் மக்களை வியப்பில் ஆழ்த்துகிறது. பணம் செலுத்த பலவழிகள் இந்த இயந்திரத்தில் ஏற்படுத்தப் பட்டுள்ளது. விரைவில் இந்தியாவில் நடைமுறைக்கு வருகிறது.

31,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: பெரிய கடைகள், சிறப்பு அங்காடிகள் போன்ற இடங்களில் இந்த மிடுக்குப் பேசி விற்பனை இயந்திரங்கள் வைக்கப்படும். அந்த இயந்திரத்தில்  பணத்தை செலுத்தி, நமக்கு வெண்டுமென்கிற மிடுக்குப் பேசியை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த முறையில் தனது மிடுக்குப் பேசிகளை விற்க எம் ஐ எக்ஸ்பிரஸ் கியோஸ்க்ஸ் என்ற பெயரில் விற்பனை இயந்திரங்களை அறிமுகப்படுத்தவுள்ளது சியோமி.

சியோமியின் இந்தத் திட்டம், வாடிக்கையாளர்களின் செலவை குறைக்கவும் மற்றும் அவர்கள் எளிதில் மிடுக்குப்பேசிகளைப் பெறவுமே தொடங்கப்பட்டுள்ளது. இந்த கியோஸ்க்ஸ்-ன் விற்பனை இயந்திரம் மூலம், வாடிக்கையாளர் தங்கள் அருகாமையில் உள்ள இயந்திங்களில், எளிதில் மிடுக்குப் பேசிகளைப் பெற முடியும்.

இந்தத் திட்டத்தை முதலில் பெரு நகரங்களில் வெளியிடவுள்ள இந்த நிறுவனம், பிறகு அனைத்து நகரங்களுக்கும் இதனை விரிவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இது குறித்து சியோமி நிறுவனம் கூறுகையில், இந்த கியோஸ்க்ஸ் மிடுக்;குப்பேசி விற்பனை இயந்திரங்கள் முதலில் இந்தியாவிலுள்ள பெரு நகரங்களில் அறிமுகப்படுத்தப்படும். மேலும், இந்த இயந்திரங்கள் எங்கெல்லாம் வைக்கப்பட்டுள்ளது என்பதை சியோமியின் இணயத் தளத்தின் வாயிலாக அறிந்துகொள்ளலாம்.

பணம் செலுத்த பல வழிகள் இந்த இயந்திரத்தில் அமைக்கப் பட்டுள்ளது. நேரடியாக பணம் செலுத்தியோ, அல்லது கடன் மற்றும் ஆதாய அட்டைகள் வாயிலாகவோ அல்லது இயங்கலை பரிவர்த்தனை மூலமாகவோ பணம் செலுத்தி தாங்கள் விரும்பும் மிடுக்குப் பேசியைப் பெற்றுக்கொள்ளலாம். 

சியோமி நிறுவனம், இந்த எம் ஐ எக்ஸ்பிரஸ் கியோஸ்க்ஸ் விற்பனை இயந்திரங்களை முதலில் மக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதிகளான விமான நிலையம், தொடர்வண்டி நிலையம், அடுக்கக கடைகள் போன்ற இடங்களில் அறிமுகப்படுத்தவுள்ளது.

இந்த இயந்திரத்தில் மிடுக்குப்பேசிகள் மட்டுமின்றி அந்த நிறுவனத்தின் மற்ற தயாரிப்புகளையும் விற்பனைக்கு வைக்கவுள்ளது. மேலும் அதன் விலை தன் தளமான மைகாம்மில் குறிப்பிடப்பட்டிருக்கும் விலையின் அளவே இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த எம் ஐ எக்ஸ்பிரஸ் கியோஸ்க்ஸ் என்பது, வாடிக்கையாளர்கள் சியோமி தயாரிப்புகளை நேரடியாக எளிதில் பெற உதவும் என சியோமி நிறுவனம் கூறியுள்ளது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,152.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.