சீனாவில், 'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்' படம் பார்த்துக் கொண்டிருந்த ஒரு இளம் பெண், படத்தின் தன்விருப்ப நடிகரான, அயர்ன்மேன் இறப்பை தாங்க முடியாமல் கதறி கதறி அழுது மூச்சுத் திணறல் பாதிப்புக்கு சிகிச்சை பெற்றுள்ளார். 16,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: மார்வல் தொடரில் நிறைவுப் படமாக தயாராகியிருக்கும் மேற்கத்திய படம் 'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்'. உலக அளவில் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் இந்தப் படம் வெள்ளிக் கிழமையன்று- தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு உலக மொழிப் பதிப்புகள் வெளியாகி படம் எதிர்பார்த்ததற்கு மேலாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்தப் படத்தில் வரும் அயர்ன் மேன் வேடத்திற்கு தமிழ்ப் பதிப்பிற்கு பிரபல தமிழ் நடிகர் விஜய் சேதுபதி தமிழில் பேசியுள்ளார்.
அவெஞ்சர்ஸ் தொடர்படங்களில் அண்;மையில் வெளியான 'அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்' என்ற பாகத்தில் தானோஸ் என்ற பகைவன் அனைத்து நவரத்தின கற்களைக் கைப்பற்றி, தனது சக்தியின் மூலம் உலகில் உள்ள பாதி மக்களோடு அவெஞ்சர்ஸ் குடும்பங்களையும் அழித்து விடுகின்றான், இதன் தொடர்ச்சியாகவே: மார்வல் தொடரில் நிறைவுப் படமாக தயாராகியிருக்கும் வெள்;ளிக் கிழமையன்று வெளியான 'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்' படத்தில்:
விண்வெளியில் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கும் அயன் மேனை கேப்டன் மார்வல் பூமிக்கு அழைத்து வருகிறார். உடல்நிலை மோசமாக இருக்கும் இவருக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றுகிறார்கள். தானோசிடம் இருக்கும் நவரத்தின கற்களை வைத்து இழந்த அனைவரையும் மீட்க நினைக்கிறார்கள் அவெஞ்சர்ஸ். இதற்கு உதவி செய்யும் தானோசின் மகள் நெபுலா. ஒரு வழியாக தானோஸ் இருக்கும் கோளைக் கண்டுபிடிக்கிறார்கள். ஆனால், தானோசிடம் கற்கள் இல்லாததை கண்டு விசாரிக்கும் போது, கற்களை அழித்து விட்டதாக தானோஸ் கூறுவதை கேட்டு அதிர்ச்சியடைகிறார்கள்.
இதற்கு தீர்வாக 'கால இயந்திரம்' மூலம் ஐந்து ஆண்டுகள் பின்னோக்கி செல்லுகிறார்கள் அவெஞ்சர்ஸ் குழுவினர். இவர்களின் காலப் பயணத்தை அறிந்த தானோஸ் இவர்கள் வழியாக சென்று நவரத்திர கற்களை தான் மீண்டும் அடைந்து விட பெரும் படையுடன் போர் தொடுக்கிறான்.
அதே நேரத்தில் எதிர்பாராத தருணமாக அவேஞ்சர்சில் காணாமல் போனவர்கள் மந்திர சக்தி மூலம் மிக பெரும் படையுடன் வந்து தனோஸ் படைக்கு எதிராக போராடுகிறார்கள்.
இந்த கடைசி மிகப்பெரியபோரில் காலப் பயணத்தில் மீட்டெடுத்த நவரத்தின கற்களை தன்கையில் பொருத்தி தானோசை அழிக்கும் அயன் மேன் தன் உயிரை தியாகம் செய்கின்றார். (நவரத்தினக் கற்களை தன்கையில் பொருத்தி விரும்பிய சாதனைகளை செய்தவர்களை குறிப்பிட்ட நேரத்திற்குள் அது அழித்து விடுமாம். அதிலிருந்து தப்பவே பிரபஞ்சத்தில் சரிபாதி பேர்களை அழித்த தானேஸ் உடனடியாக அந்த நவரத்தினக் கற்களை அழித்து விட்டாராம் அவென்ஜ்ர்ஸ் இன்பினிட்டி வார் படத்தில்.) இத்துடன் இந்த திரைப்படம் முடிவு பெற்றது
அயன் மேனாக நடித்த ராபர்ட் ஜான் டவுனி ஜூனியர் அகவை 54. ஒரு அமெரிக்க நாட்டு நடிகர், தயாரிப்பாளர், திரைக்கதை, பாடகர் மற்றும் பாடலாசிரியர். இவர் இளவயதிலேயே திரைப்படங்களில் நடித்தவர். இவர் நடித்த அயன் மேன் தொடர்கள் பிரபலமானவை. இவை அதிகளவில் வசூலைக் குவித்தன. அயன் மேன் 1, அயன் மேன் 2, அயன் மேன் 3, அவேஞ்சர்ஸ்: ஏஜ் ஒப் உல்ட்ரோன், ஏர் அமெரிக்கா உள்ளிட்டவை இவர் நடித்த திரைப்படங்களில் குறிப்பிடத்தக்கன. இவர் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் நடித்த அண்மைய திரைப்படங்களில் சில: சிங்கிங் டிடெக்டிவ், கிஸ் கிஸ் பேங் பேங், கோதிகா, டிராபிக் தண்டர். ஆங்கிலத் திரைப்பட நடிகர்களில் அதிக சம்பளம் பெற்றவர்களில் இவரும் ஒருவர்.
ஒரு படம் வெற்றி என்றால் அந்தப் படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் வருவது மேற்கத்திய திரையுலகில் மிகமிக அதிகம். அப்படி வரும் ஒவ்வொரு படமும் மக்களிடம் வெற்றி பெறுவதோடு அதன் அடுத்த பதிப்புகள் மிக ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படும். அந்த வகையாகவே, அப்படி வெற்றிப் படமான மார்வல் தொடரில் நிறைவுப் படமாக தயாராகி வெளி வந்திருக்கும் படம்தான் 'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்'.
பெரிய எதிர்ப்பார்ப்பில் காத்திருந்த ரசிகர்களும் படத்தை ஆவலாக பார்த்து வருகிறார்கள். உலகம் முழுவதும் வெளியாகியுள்ள இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.
இந்நிலையில், சீனாவில் இப்படத்தை பார்த்துக் கொண்டிருந்த ஒரு இளம் பெண் படத்தின் தன்விருப்ப நடிகரான அயர்ன்மேன் இறப்பை தாங்க முடியாமல் கதறி கதறி அழுதுள்ளார். அதனால் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட மயக்கமடைந்துள்ளார். அவரின் நிலை கண்டு அந்தப் பெண்ணின் தோழி மருத்துவமனையில் உடனே சேர்த்ததால் அவர் உயிர் பிழைத்துள்ளார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,137.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.