பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று மோடி கடந்த 8ம் தேதி அறிவித்தார். மோடியின்; இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், திரும்ப பெறக் கோரியும் எதிர்க்கட்சிகள் கடுமையான போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடுவண் அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியதாவது: எந்தவொரு சூழ்நிலையிலும் செல்லாத நோட்டு அறிவிப்பு திரும்ப பெறப்படாது. எதையும் திரும்ப பெறுவது என்பது மோடியின் ரத்தத்திலேயே கிடையாது. சூழ்நிலையை மேம்படுத்த அரசு தயாராக உள்ளது. இது தொடர்பாக பரிந்துரைகள் இருந்தால் எதிர்க்கட்சிகள் முன்வந்து தெரிவிக்கலாம். நடுவண் அரசின் செல்லாத நோட்டு முடிவு அறிவிப்பு புரட்சிகரமானது மற்றும் வரலாற்று சிறப்பு மிக்கது. இந்த முடிவு நாட்டுக்கு சாதகமானது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



