Show all

மாயாவதி குற்றச்சாட்டு! காபந்து தலைமை அமைச்சர் மோடி அதிகாரத்தையும் அரசு இயந்திரத்தையும் தவறாகப் பயன்படுத்துகிறார்

தேர்தல் ஆணையத்தின் முன் அனுமதியின்றி காபந்து தலைமைஅமைச்சர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றுவது என்பது அதிகாரத்தையும் அரசு இயந்திரத்தையும் ஒட்டு மொத்தமாக தவறாக பயன்படுத்தும் செயல் என்று பகுஜன் தலைவர் மாயாவதி குற்றஞ்சாட்டியுள்ளார்

14,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: விண்வெளியில் இந்திய செயற்கைக்கோள்களை பாதுகாக்கும் முயற்சி என்று கூறி அடுத்த நாட்டின் செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் 'மிசன் சக்தி' சோதனையை  இந்தியா வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது என்று நேற்று காபந்து தலைமைஅமைச்சர் மோடி தொலைக்காட்சிகளில் தோன்றி நாட்டு மக்களிடம் பேசினார்.

இந்திய தேர்தல் ஆணையத்திடம் முறைப்படி முன் அனுமதிபெறாமல், காபந்து தலைமை அமைச்சர் மோடி நேற்று  நாட்டு மக்களிடம் உரையாற்றியது ஏன்? எதற்காக? என்பதுகுறித்து ஆராய தேர்தல் ஆணையம் ஒரு ஆய்வுக் குழுவை நியமித்துள்ளது. மோடி தேர்தல் ஆதாயங்களுக்காக தனக்குள்ள அதிகாரத்தையும் அரசு இயந்திரத்தையும் ஒட்டுமொத்தமாக தவறாகப் பயன்படுத்தியுள்ளார். இதில் தேர்தல் ஆணையம் ஒரு முன்மாதிரியாக செயல்பட வேண்டும், இவ்வாறு தனது ஒரு கீச்சுப் பதிவில் மாயாவதி தெரிவித்துள்ளார். அதேபோல இன்னொரு பதிவில்,

ஏற்கெனவே பாஜக தலைவர்கள், தேர்தல் நடத்தை விதிமுறைமீறல் வழக்கில் குற்றவாளிகள் என சட்டம் ஒழுங்கு விவகாரங்களில் நிரூபிக்கப்பட்ட அனுபவங்கள் உள்ளன. அவ்வகையில் காபந்து தலைமை அமைச்சர் மோடி மீண்டும் அதேபோக்கில் சென்று தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி தேர்தல் ஆணையத்தின் முறைப்படி முன் அனுமதி எதுவும் பெறாமல் உரையாற்றியுள்ளார். அப்படி அவசர அவசரமாக பேசுவதற்கான அவ்வளவு நெருக்கடி எதுவும் இங்கில்லை. இப்பிரச்சினையில் தேர்தல் ஆணையம் நேர்மையாக நடந்துகொள்ளும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இவ்வாறு தனது அடுத்த பதிவில் தெரிவித்துள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,105.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.