தினகரனின் அமமுகவிற்கு பொதுச்சின்னம் வழங்கிட உச்ச அறங்கூற்றுமன்றம் பரிந்துரைத்ததை அடுத்து தினகரனின் அமமுகவிற்கு பரிசுப்பெட்டியை சின்னமாக வழங்கியுள்ளது தேர்தல் ஆணையம். 15,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கட்சியினருக்கு நேற்று தினகரன் தமிழக மக்களுக்கு இடையூறு இல்லாமலும், தேர்தல் ஆணையத்தின் குற்றச்சாட்டிற்கு உள்ளாகமலும் தேர்தலை எதிர் கொள்வது குறித்து அன்பறிக்கை வெளியிட்டிருந்தார். தினகரனின் அமமுகவிற்கு பொதுச்சின்னம் வழங்கிட உச்ச அறங்கூற்றுமன்றம் பரிந்துரைத்ததை அடுத்து தினகரனின் அமமுகவிற்கு பரிசுப்பெட்டியை சின்னமாக வழங்கியுள்ளது தேர்தல் ஆணையம். உளவியலாக நாங்கள் தான் பெறுவோம் என்பதாக எங்களுக்கு முன்கூட்டியே தேர்தல் ஆணையத்தால் வழங்கப் பட்ட பரிசுப்பெட்டி சின்னம் அமைந்து விட்ட நிலையில் இதை மக்களிடம் விரைவாக கொண்டு சென்று வெற்றியை ஈட்டி அதிமுகவை மீட்போம் என்கிறார் தினகரன். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,106.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.