உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்படாத காரணத்தால், குடிநீர், தெருவிளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் திட்டப்பணிகள் தேங்கியுள்ளன என்ற பொது நல வழக்கில் தமிழக அரசு, 'தேர்தல் நடத்த முடியாது' என்று பிரமாணப் பத்திரம் பதிகை செய்துள்ளது. 22,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: உள்ளாட்சி தேர்தலை தற்போதைக்கு நடத்த முடியாது என்று உச்சஅறங்கூற்றுமன்றத்தில் பதிகை செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகம் அஞ்சுகிறது- நீட் முறையற்றது என்பதால்! எடப்பாடி பன்னீர் அரசு அஞ்சுகிறது- உள்ளாட்சி தேர்தல் முறையற்றது என்று சொல்கிறதா? -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,143.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கோரி உச்சஅறங்கூற்றுமன்றத்தில் வழக்கு ஒன்று நடந்து வருகிறது. அந்த வழக்கில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது தமிழக அரசு.
ஆதில், (கடந்த மூன்றாண்டுகளாக, ஒவ்வொரு வழக்கின் போதும் தமிழக அரசு உள்ளாட்சி தேர்தல்களை நடத்தாமல் இருப்பதற்காக வெவ்வேறு காரணங்களை சொல்லி தள்ளிப்போட்டு வருகின்ற வகையாகவே) 'தற்போது மக்களவை தேர்தல் நடந்து வருவதால் இந்திய தேர்தல் ஆணையத்திடமிருந்து மாநிலத் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை பெற இயலவில்லை. வாக்காளர் பட்டியலையும் சரிபார்க்க வேண்டியுள்ளது. எனவே, தற்போதைக்கு உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாது என்று தெரிவித்துள்ளது.
ஆம்! மக்களைச் சந்திக்க எடப்பாடி- பன்னீர் அரசு அஞ்சுகிறது. தங்கள் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டிருக்கிற முறைகளுக்கு எந்தத் தேர்தலும் எதிரானவையே என்று கருதுகிறது எடப்பாடி- பன்னீர் அரசு.
அவர்கள் முயற்சிகளையெல்லாம் தாண்டி இடைத்தேர்தல் வந்துவிட்ட நிலையில், இன்னும் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்து அவர்களுக்கான இடைத் தேர்தல் வரும் வரை ஆட்சியைத் தக்க வைக்கலாம் என்பதுவே தற்போதைய எடப்பாடி- பன்னீர் நடவடிக்கைகள். ஏப்போதும், எந்தத் தேர்தலும் எடப்பாடி- பன்னீர் அரசுக்கு எதிரானவையே.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.