Show all

மோடியின் ரூபாய்தாள் விவகார நிருவாகக் குளறுபடிக்கு மேலும் ஒரு சான்றாய்

முன்னால் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் மகள் திருமணத்துக்காக, 100 கோடி ரூபாய் கறுப்பு பணத்தை, வௌ;ளையாக்கி கொடுத்த, அரசு அதிகாரியின் கார் ஓட்டுநர் நஞ்சு அருந்தி தற்கொலை செய்தது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவில், சுரங்க தொழில் அதிபரும், முந்தைய, பா.ஜ., ஆட்சியில் அமைச்சராக இருந்தவருமான ஜனார்த்த ரெட்டி, ஊழல் புகாரில் சிக்கி, சிறை சென்றார்; தற்போது, பிணையில் வந்துள்ளார். சமீபத்தில், இவரது மகள் திருமணம், 500 கோடி ரூபாய் செலவில் ஆடம்பரமாக பெங்களூரில் நடந்தது. செல்லாத ரூபாய் நோட்டு விவகாரத்தால், நாடு முழுவதும் உள்ள மக்கள், மோடியின் ரூபாய்தாள் விவகார நிருவாகக் குளறுபடியில் பணத்திற்குத் திண்டாடும் சூழ்நிலையில், பல கோடி ரூபாய் செலவில், திருமணம் நடந்தது, மோடியின் ரூபாய்தாள் விவகார நிருவாகக் குளறுபடிக்கு மேலும் ஒரு சான்றாய் அமைந்தது. இது குறித்து, பாராளுமன்றத்திலும் கேள்வி எழுப்பப் பட்டது. திருமணத்திற்கான செலவினங்கள் குறித்து, வருமானவரி அதிகாரிகள் சோதனைகள் நடத்தினர். இந்நிலையில், பெங்களூரில், நிலம் கையகப்படுத்தும் பிரிவில், உயர் அதிகாரியாக பணியாற்றும், பீம நாயக்கிடம், கார் ஓட்டுநராகப் பணியாற்றிய, ரமேஷ் கவுடா,(அகவை31) நேற்று முன் தினம், நஞ்சு அருந்தி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன், அவர் எழுதி வைத்துள்ள, 11 பக்க கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது: நிலம் கையகப்படுத்தும் அதிகாரி பீம நாயக்கிடம், கார் ஓட்டுநராக பணியாற்றினேன். இவர், வெவ்வேறு இடங்களில், சட்ட விரோதமாக சொத்து சம்பாதித் துள்ளார். 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர மோதிரம் வாங்கியுள்ளார். முன்னால் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் மகள் திரு மணத்துக்காக,100 கோடி ரூபாய் கறுப்பு பணத்தை, வௌ;ளையாக்கி கொடுத்தார். வரும், 2018ல் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலில், ஹெகரி பொம்மன ஹள்ளி தொகுதியில், பீம நாயக் போட்டியிடு வதற்காக, ஜனார்த்தன ரெட்டிக்கு 100 கோடி ரூபாய் கொடுப்பதாக கூறினார்; இந்த விசயங்கள் அனைத்தும், எனக்கு தெரியும். இதை யாரிடமாவது கூறினால், ரவுடிகளை அனுப்பி, என்னை கொலை செய்வதாக மிரட்டியதுடன், ஊதியத்தையும் தராமல் பிடித்து வைத்துள்ளார், பீம நாயக். இந்த மிரட்டலுக்கு பயந்து தற்கொலை செய்து கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப் பட்டிருந்தது. இந்த விவகாரம், கர்நாடகா அரசியலில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.