Show all

மும்முறை தலாக் சொல்வது அர்த்தமற்றது: அலகாபாத் உயர்நீதிமன்றம்

உ.பி.,யைச் சேர்ந்த புலாந்த்ஷஹர் பகுதியைச் சேர்ந்த ஹினா என்ற 23 வயது இளம் பெண், தன்னை விட 30 வயது மூத்த நபரை திருமணம் செய்தார். அவர் தனது முதல் மனைவியை தலாக் கூறி விவாகரத்து செய்தார். தொடர்ந்து பாதுகாப்பு கேட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம் மும்முறை தலாக் கூறுவது என்பது மோசமானது. அர்த்தமற்றது. இந்தியா நல்ல நாடாக மாறுவதை தடுப்பதுடன், பின்னோக்கி இழுக்கிறது. மிக அவசர காலத்தில் தான் தலாக் கூற முஸ்லிம் மதம் அனுமதித்துள்ளது. சேர்ந்து வாழ்வதற்கு எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடையும் பட்சத்தில் தான், தலாக் கூறி விவாகரத்து பெறலாம் என கருத்து தெரிவித்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.