Show all

நடுவண் அரசு மிகத்தெளிவு! கர்நாடகத் தேர்தல் முடியாமல் காவிரி மேலாண்மை குறித்த யோசனைகூட கிடையாது

14,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: உச்ச அறங்கூற்று மன்றத்தின் காவிரி தீர்ப்பு குறித்து யோசனை தொடங்க, மேலும் இரண்டு கிழமை கால அவகாசம் கேட்டு, மோடி அரசு உச்ச அறங்கூற்று மன்றத்தில் இன்று மனு பதிகை செய்துள்ளது.

உச்ச அறங்கூற்று மன்றத்தின் காவிரி குறித்த தீர்ப்பு என்ன என்பதைப் பற்றி அணுவளவும் மோடி அரசுக்கு யோசனையே கிடையாது. 

கர்நாடக ஆட்சியை காங்கிரசிடமிருந்து பிடுங்க வேண்டும். அந்த முயற்சியில் இந்தக் காவிரி குறித்து தாம் மிகச் சிறிதாக யோசிப்பதாகக் கூட காவிரி தீர்ப்பு தொடர்பான நான்கு மாநிலங்களுக்கும் தகவல் கசிந்து விடக் கூடாது. தமக்கு கர்நாடகத் தேர்தல் முடிவதற்கு முன்பாக ஏதாவது கருத்து இருப்பதாக நான்கு மாநிலங்களில் எது புரிந்து கொண்டாலும் கர்நாடகத் தேர்தல் வெற்றி கேள்விக் குறியாவதற்கு வாய்ப்பு இருக்கிறது. என்று தமக்கு தாமே மோடி அரசு கற்பித்துக் கொண்டது. 

குறுக்கே கருத்து தெரிவிப்பவர்கள் எல்லாம் கோமாளிகள் ஆகிவிட வேண்டும். போராடுகிறவர்கள் எல்லாம் முட்டாள்கள் ஆகி விட வேண்டும். 

காநாடகத் தேர்தல் முடிந்ததும், கர்நாடகம் பாஜக வசம் வந்து விட்டால் காவிரி மேலாண்மை வாரியம் கிடையவே கிடையாது. 

கர்நாடகம் கைமாறிப் போனால், அடுத்து நாடளுமன்றத் தேர்தல் அடிப்படையில், காவிரி தீர்ப்பு பந்தாடப் படும். பந்தை எந்த மாநிலம் பிடிக்கிறதோ அந்த மாநிலத்திற்கு சாதகமாக உச்ச அறங்கூற்று மன்றத்தின் தீர்ப்பு வளைக்கப் படும்.

பேய்கள் ஆட்சியில் பிணந்தின்னும் சாத்திரங்களே அரசாளும் என்பது தானே பழமொழி.

  -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,770.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.