Show all

பூட்டிக் கொள்ள இனிய விலங்குகளாக பெரிய இதழ்கள், தாங்களே தங்களை அடிமைப் படுத்திக் கொள்கின்றன

14,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: உலக அளவில் உள்ள 180 நாடுகளில் இதழியல் சுதந்திரம் பற்றிய ஆய்வறிக்கையை ஓர் தனியார் இதழியலாளர்கள் அமைப்பு வெளியிட்டிருக்கிறது. இதன்படி, இதழியல் சுதந்திரத்தில் இந்தியா 180 நாடுகளில் 138வது இடத்தில் பின்தங்கியுள்ளது.

இதற்கு காரணம்: 

இந்தியாவில் மிகப் பெரிய இதழ்கள் எல்லாம் தங்களை அரசு விளம்பரங்களுக்காகவும், வாதம் வம்பு வழக்குகளை எதிர் கொள்ள திராணி யில்லாததாலும், பூட்டிக் கொள்ள இனிய விலங்குகளாக தம்மை விரும்பி அடிமைத் தளையில் பிணைத்துக் கொள்கின்றன. வளரத் துடிக்கும் இரண்டாம் இடத்தில் இருக்கும் இதழ்கள், மற்றும் சிற்றிதழ்களாக இயங்கிக் கொண்டிருப்பவை, மற்றும் சமூக வலைத்தளங்களில் எழுதுபவர்கள், தங்கள் கருத்துகளை சுதந்திரமாக வெளியிட அச்சப்பட வேண்டிய நிலை இருக்கிறது.

இந்தியாவில் உள்ள மத அமைப்புகளால் இதழியலாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் மிக எளிதாக தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். இந்தியாவில் காஷ்மீர் மாநிலத்தில் இதழியலாளர்கள் யாரையும் எளிதாக அணுக முடிவதில்லை.

இதழியலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களை சீர்படுத்த நடுவண் அரசு முன்வருவதில்லை. இதழியலாளர்களுக்கு எதிராக வரும் கொலை மிரட்டல்களை கூட கண்டு கொள்வதில்லை. கடந்த ஆண்டு கௌரி லங்கேஷ் உள்ளிட்ட பல இதழியலாளர்கள்; கொல்லப்பட்டுள்ளனர். பல இடங்களில் இதழியலாளர்கள் தாக்கப்படுகின்றனர்.

இப்பட்டியலில் நார்வே முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதுவும் இரண்டாவது முறையாக முதலிடத்தை பிடித்துள்ளது. பாகிஸ்தான் இந்த பட்டியலில் 139வது இடத்தைப் பெற்றுள்ளது. வடகொரியா, எரித்திரியா, துர்க்மெனிஸ்தான், சிரியா மற்றும் சீனா ஆகியவை கடைசி இடங்களில் உள்ளன.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,770.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.