Show all

முத்துலட்சுமி கேள்வி! வீரப்பன் இருந்திருந்தால் காவிரியில் இந்த நிலைமை வந்திருக்குமா

14,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லணையில, 'காவிரி உரிமைமீட்பு ஒன்றுகூடல் போராட்டம்' நடந்தது. காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமையில் நடக்கும் இந்தப் போராட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சட்டமன்ற உறுப்பினர்கள் தமிமுன் அன்சாரி, தனியரசு, இயக்குநர் பாரதிராஜா, அமீர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி வருகின்றனர். 

இந்த நிகழ்ச்சியில் பேசிய, காலங்கடந்து, இன்று வனப் போராளி என்று போற்றிக் கொள்கிற, வீரப்பன் அவர்களின்  மனைவி முத்துலட்சுமி, 'தமிழகம் முழுவதும் போராட்ட மயமாகியுள்ளது. காவிரி, நெடுவாசல், நியூட்ரினோ எனப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திசையெங்கும் தமிழர்கள் வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர். எனது கணவர் வீரப்பன் இருந்திருந்தால் காவிரிக்காக நாம் போராடும் சூழ்நிலை வந்திருக்குமா. அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டும்கூட அதை நடுவண் அரசு மதிக்கவில்லை. ஆனால், அவர் உயிரோடு இருந்திருந்தால், இந்தநிலை வந்திருக்காது. அவரின் ஒற்றை காணொளிக்கு இருந்த மதிப்பு இப்போது இல்லை. தமிழர்களின் உரிமையை மதிக்காத இவர்களை அப்புறப்படுத்த போராட்டங்களை முன்னெடுப்போம். மக்கள் போராட்டங்களில் நிச்சயம் நானும் நிற்பேன்' எனக் கூறினார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,770.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.