Show all

பிரதமர் மோடி அதிருப்தி! ஊரடங்கை பெரும்பாலானோர் தீவிரமாக பின்பற்றவில்லை

ஊரடங்கை பெரும்பாலானோர் தீவிரமாக பின்பற்றவில்லை என தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி அதிருப்தி தெரிவித்துள்ளார். மக்கள் ஊரடங்கை சரியாக பின்பற்றப்படுவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். என்றும் தெரிவித்துள்ளார்.

10,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையான, ஊரடங்கு உத்தரவை பெரும்பாலான மக்கள் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை என தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி வேதனை தெரிவித்துள்ளார். ஊரடங்கு மூலம் மக்கள் தங்களையும் தங்கள் குடும்பத்தையும் பாதுகாத்துக்கொள்ள முடியும் என அறிவுறுத்தியுள்ள அவர், மக்கள் ஊரடங்கை சரியாக பின்பற்றப்படுவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

மக்களும், அரசுமாக- தமிழகம் சிறப்பாக கெரோனா தொற்று பரவலுக்கு எதிராக நடிவடிக்கை முன்னெடுப்;பதை ஊடகங்கள் வினாடிக்கு ஒருமுறை ஒலிபரப்புவதை மோடியும் பார்த்திருப்பார். அவருடைய கவலை வடமாநில மக்கள் குறித்ததாகவே இருக்கும். அது மக்கள் குறையல்ல. அவர்களில் பெரும்பான்மையானவர்களுக்கு கல்வியைக் கொடுக்காமலும், அவமானச்சுவர் கட்டி பாதுகாத்தும், அடுத்த எந்த மொழியும் படித்து உலக அறிவு பெற்றுவிடக் கூடாது என்று, அவர்கள் சொந்த மொழியான ஹிந்தியை நம்மீது திணித்து அவர்களை முரடர்களாகவே வைத்திருக்கின்றார்களே நேற்றைய காங்கிரசும், இன்றை பாஜகவும். 
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.