“கொரோனா பரவலைத் தடுக்க முன்னெடுக்கும் அரசின் முடக்க முயற்சிகள்” காரணமாக ஒவ்வொரு துறையிலும் பல லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தொழில் அதிபர்கள், வர்த்தகர்களின் நட்டத்தை ஈடுகட்ட நடுவண்-மாநில அரசுகள் சலுகைகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. 09,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா தொற்று பரவலைத் தடுக்க நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் பல்வேறு துறைகள் முடங்கியுள்ளன. மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், சிறப்பு அங்காடிகள், பெரிய கடைகள் திறப்பதற்கு தடை, வாகன நடமாட்டங்களுக்கு கட்டுப்பாடு, மூலப்பொருட்கள் வருவதில் தடை போன்ற காரணங்களால் அனைத்து பிரிவு வணிகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஒவ்வொரு துறையிலும் பல லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, தொழில் அதிபர்கள், வணிகர்கள் இந்த நட்டத்தை ஈடுகட்ட நடுவண்-மாநில அரசுகள் சலுகைகளையும், பல்வேறு உதவிகளையும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். நமது தலைமைஅமைச்சர் மோடி அவர்கள் கொரோனா பாதிப்பு வரை இந்தியாவில் இருந்த காலத்தை விட வெளிநாடுகளில் சுற்றிய காலங்களே அதகம். ஆனால் தற்போதோ- கொரோனா பாதிப்பில் இருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள வெளிநாட்டுப் பயணத்தைத் தவிர்த்து கொண்டிருக்கிறார். ஒற்றைச் சிக்கலுக்கு ஒற்றை நடவடிக்கை. மாறாக, அமைச்சர் பதவியும் வேண்டாம், அரசியலும் வேண்டாம் என்று வீட்டில் முடங்கிவிட வில்லையல்லவா? அது போன்றுதாம் ஒட்டு மொத்த நாட்டிற்குமான கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையை அவரும் அவருடைய நடுவண் பாஜக அரசும் முன்னெடுக்க வேண்டும். கொரோனா எங்கே தொடங்கியது? சீனாவில் உகானில். சீனா தன் நாட்டில் உகானைத் தனிமைப்படுத்தியது போல, உலக நாடுகள் சீனாவைத் தனிமைப் படுத்தியிருந்தால் இன்றைக்கு கொரோனாவே இருந்திருக்காது. உலகநாடுகள் அதைச் செய்யவில்லை. இந்த நிலையில் இந்தியா செய்ய வேண்டியிருந்தது உலக நாடுகளில் இருந்து இந்தியாவைத் தனிமைப் படுத்த வேண்டியது. இந்தியா அதை கொஞ்சம் கொஞ்சமாக நடைமுறைப்படுத்துவதற்குள் இந்தியாவிற்குள் கொரோன புகுந்து விட்டது. உலக நாடுகளில் இருந்து கொரோனா பரவலுக்கான ஊடகமாக செயல்பட்டவர்கள் யார்? இந்திய வந்த இவர்களை தனிமைப் படுத்தியிருந்தாலே போதும். அதுவும் கூட செய்யாத நிலையில் அவர்களோடு தொடர்பு கொண்டவர்களைப் பாட்டியலிட்டு தனிமைப் படுத்துவது எளிமையானதே. இவ்வளவு பெரிய நிர்வாக அமைப்பு உடைய நடுவண் அரசு, மாநில அரசு, பெரிய பெரிய பணமுதலைகளை கோட்டை விட்டுவிட்டு நாடுமுழுவதும் சிறுகுறு முதலாளிகளை வளைத்துப் பிடிக்கிற வருமான வரித்துறை அதிகாரிகள், இராணுவம், காவல்துறை, அறங்கூற்றுத்துறை, நடுவண் குற்றப் புலனாய்வுத்துறை, உளவுத்துறை, வருவாய்த்துறை, ஆட்சிப்பணித்துறை, இப்படி ஆயிரம் ஆயிரம் துறை அதிகாரிகளை முடுக்கி ஒற்றைத் தீர்வை முன்னெடுத்து கொரோனாவை அடக்கலாமே. மாறாக முன்பு கருப்புப் பணத்தைப் பிடிப்பதற்கு- எலிக்குப் பயந்து கூரையைக் கொளுத்திய கதையாக பணமதிப்பிழப்பு செய்தது போலவே- தற்போதும் நடுவண் பாஜக அரசு- கொரோனா தொற்று பரவலைத் தடுக்க நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து, இதனால் பல்வேறு துறைகளை முடக்கியுள்ளதை அறியாமை சார்ந்த முயற்சியாக சமூக ஆர்வலர்கள் கருதுகின்றார்கள். தற்போது இந்தியாவில் பாதிக்கப்பட்டிருக்கும் துறைகள்: 2. இந்த துறையில் சில்லறை வணிகத்தில் ரூ.60 லட்சம் கோடி வணிகம் நடைபெறும். கொரோனா பரவல் தடைகளால்; 2 லட்சம் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. 3. சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறை: இந்த துறையில் ரூ.18 லட்சம் கோடி வணிகம் நடைபெறும். கொரோனா பரவல் தடைகளால் கடுமையாக பாதிக்கப்பட்ட துறைகளில் இதுவும் ஒன்றாகும். 4. ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறை: இது, 1.82 லட்சம் கோடி வணிகம் நடக்கும் துறையாகும். திரைப்படம், சின்னத்திரை படப்பிடிப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டு உள்ளது. திரைப்படக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 7. வங்கி மற்றும் வங்கி அல்லா நிதி நிறுவனங்கள்: இந்தத் துறையில் ரூ.233 லட்சம் கோடி வணிகம் நடைபெறுகிறது. கொரோனா பரவல் தடைகளால், இவற்றில் கடன் வாங்கியவர்கள் முதல் மற்றும் வட்டியையும் திருப்பி செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். குறிப்பாக விமான நிறுவனம், உணவகங்கள், போக்குவரத்து துறைகள் கடுமையான பாதிப்பில் இருக்கின்றன. இதனால் அவர்களால் கடனை சரியாக திருப்பி செலுத்த முடியாது. இது போன்ற காரணங்களால் வங்கிகளின் கடன் வளர்ச்சி 10 விழுக்காடு வரை வீழ்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 8. அழைப்பின் பேரில் வாடகை கார்களை அனுப்பும் நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றன. சுமார் 60 விழுக்காடு வரை தொழில் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக இந்த நிறுவனங்கள் கூறுகின்றன. மேலும் இதன் ஓட்டுநர்கள் வருமானம் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. 9. தகவல் தொழில்நுட்பதுறை: ரூ.14.32 லட்சம் வணிகம் நடைபெறும் துறையாக இது உள்ளது. கொரோனா பரவல் தடைகளால், பல்வேறு கேட்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இந்த துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தொழிலாளர்கள் பணிக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அதுவும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த துறை சார்ந்து ரூ.45 லட்சம் கோடி வர்த்தகம் நடைபெறுகிறது. தற்போது எரிபொருள் தேவை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் வருமான இழப்புகள் ஏற்பட்டுள்ளன. மின் உற்பத்தி துறைகளும் பல்வேறு வகையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது.
1. சுற்றுலாப் பயணிகள்.
2. இங்கே ‘நீட்’டால் கல்வி உரிமை மறுக்கப்பட்டு உலக நாடுகளுக்கு மருத்துவம் படிக்கப் போனவர்களை விடுமுறை கொடுத்து வெளிநாடுகள் வெளியேற்றியதால், இந்தியா திரும்பியவர்கள்.
3. வணிகத்திற்காக வெளிநாடுகளுக்குப் போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருந்தவர்கள்.
4. கணிகா கபூர் போல கலைத்துறை சார்ந்து வெளிநாடுகள் சென்று திரும்பியவர்கள்.
5. மோடி போல வெளிநாடுகளுக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த அரசு ஆட்சியாளர்கள் அதிகாரிகள். இன்னும் கொஞ்சம் பேர்கள் நமது பட்டியலில் அடங்காமல் இருப்பார்கள்.
6. இந்தியாவிற்கு அன்னியச் செலாவணி ஈட்டித்தருகிற வெளிநாடுகளில் வேலையிலிருக்கும் மனிதவளங்கள். அவர்களும் கூட குறைந்த கால ஒப்பந்தத்தில் போனவர்கள் மட்டுமே உலகநாடுகளால் வெளியேற்றப் பட்டிருக்கின்றனர்.
1. அதிக அளவில் விற்பனையாகும் நுகர்வு பொருட்கள்: இந்தத் துறையில் சுமார் 4.2 லட்சம் கோடி வணிகம் நடைபெறுகிறது. கொரோனா பரவல் தடைகளால் இந்த பொருட்களின் விற்பனை வெகுவாக சரிந்துள்ளது.
பெரும்பாலான தங்கும் விடுதிகள், ஓட்டல்கள், உணவுக்கூடங்கள், சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக வருமானம் முற்றிலும் நின்றுவிட்டது.
இந்த துறையில் உள்ள 5 லட்சத்து 50 ஆயிரம் ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர்.
துடுப்;பாட்டப் போட்டிகள் நிறுத்தப்பட்டு உள்ளன. பெரும்பாலான வணிக விளம்பரங்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. இந்தத் துறையில் சுமார் 80 விழுக்காட்டு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
5. விமானப் போக்குவரத்துத்துறை: இந்த துறையில் 2.25 லட்சம் கோடியில் வணிகம் நடைபெறும். பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன. இயக்கப்படுகின்ற விமானத்திலும் பயணிகளின் எண்ணிக்கை மிக குறைவாகவே இருக்கிறது. இதனால் வருவாய் இழப்பு மிக மோசமான நிலையில் உள்ளது.
6. கட்டுமானத்துறை: ரூ.13.5 லட்சம் கோடி வணிகம் நடைபெறும் துறை ஆகும். கொரோனா பரவல் தடைகளால்; 18 ஆயிரம் பெரிய கட்டுமானத் திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. 30 விழுக்காட்டு பேர்கள் வேலை இழந்து இருக்கிறார்கள். கட்டுமான துறையில் பண நடமாட்டம் முற்றிலும் நின்று விட்டது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



