Show all

கார்ப்பரேட் அறிவாளித்தனம் காட்டப்பட்டுள்ள வரவுசெலவுத் திட்டம்! மக்களுக்கு சலுகைகூட முழுமையாகக் கொடுப்பதற்கு மனம்வராத பாஜக.

கார்ப்பரேட் நிறுவனங்கள் 100விழுக்காடு  பணம் திரும்பும் சலுகை என்று அறிவித்தால் அதில் நிபந்தனை உள்ளே கிடக்கும். அதுபோலவே வருமானவரிச் சலுகையில் ஒரு நிபந்தனையை வைத்து பாஜக என்றைக்கம் கார்பரேட் அரசே என்பதை உறுதிபடுத்தியுள்ளார் நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன். 

18,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: கார்ப்பரேட் நிறுவனங்கள் 100விழுக்காடு  பணம் திரும்பும் சலுகை என்று அறிவித்தால் அதில் நிபந்தனை உள்ளே கிடக்கும். விவரம் புரிந்தவர்கள் அந்தக் கவர்ச்சி விளம்பரத்தில் ஏமாறமாட்டார்கள். 

அதுபோலவே வருமானவரிச் சலுகையில் ஒரு நிபந்தனையை வைத்து பாஜக என்றைக்கம் கார்பரேட் அரசே என்பதை உறுதிபடுத்தியுள்ளார் நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன். 

வருமான வரி விகிதத்தில் பெரும் மாற்றம்; ஆனால் ஒரு நிபந்தனை! நிர்மலா சீதாராமன் அறிவிப்பில் தனி நபர் வருமான வரி சலுகைகள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆண்டுக்கு, 5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருவாய் ஈட்டுவோர் இனி 10 விழுக்காடு  வருமான வரி செலுத்தினால் போதும் என்பது அறிவிப்பு. ஆனால் இந்த சலுகை விருப்ப தேர்வு என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்திய நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டிற்கான நடுவண் பாஜகஅரசின் வரவுசெலவு இன்று பதிகை செய்யப்பட்டுள்ளது. இது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இரண்டாவது முறையாக பதிகை செய்யும்  வரவுசெலவுத் திட்டம் ஆகும். 

நடுத்தர மக்கள் பயன் அடையும் வகையில் வெளியாகி இருக்கிற அறிவிப்பு என்று பார்த்தால், வருமான வரி குறைப்பால் பலன் இல்லை. கொடுப்பதை போல கொடுத்து வேறு இடத்தில் எடுக்கும் கார்ப்ரேட் மனப்பான்மை அரசு பாஜகவினுடையது என்பது உறுதியாகியுள்ளது. கெடுக்கிற திட்டங்கள் ஆயிரம் போடுகிற நடுவண் பாஜக அரசுக்கு, சின்னதொரு கொடுக்கிற அதுவம் சலுகை கொடுக்கிற திட்டத்திற்கே மனம் வருவதில்லை.

பல ஆண்டுகளாக மக்கள், வருமான வரி வரம்பை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள். தற்போது இந்த வரி விதிப்பு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த சலுகை விருப்ப தேர்வு என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சலுகையை தேர்வு செய்தால், வேறு எந்த விதமான வரிக்கழிவு சலுகையையும் பெற முடியாது. 

என்ன வரிக்கழிவு சலுகை? அதாவது வருங்கால வைப்புநிதி, ஐந்து ஆண்டு நிரந்தர வைப்புத்தொகை, தேசிய சேமிப்பு பத்திரம், கிசன் விகாஸ் பத்திரம், செல்வமகள் சேமிப்பு திட்டம், என்பிஎஸ், காப்பீடுகள், நலங்கு (ஹெல்த்) காப்பீடு, மாற்றுத் திறனாளிகளுக்கான வரிச்சலுகைகள், வீட்டு கடன் மற்றும் வீட்டுக் கடன் வட்டி ஆகிய வரிக்கழிவு சலுகைகளை பெற்றால், இந்த புதிய வருமான வரி சலுகையை பெற முடியாது. புதிய வருமான வரி சலுகையை பெற்றால், முன்னர் குறிப்பிட்ட வரிக்கழிவு சலுகையை பெற முடியாது. ஏதாவது ஒரு வகையில் இந்த புதிய வரி திட்டம் காரணமாக, வரி செலுத்த வேண்டிய நிலைதான் இருக்கிறது. அதனால் இந்த சலுகை கார்ப்பரேட்டுகளின் கவர்ச்சி விளம்பரம் போன்றது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.