Show all

தமிழுக்காக போராடிய தமிழர் குலதெய்வம் கருவூரார் அவர்களே காப்பு செய்யுங்கள்! தீயணைப்பு பாதுகாப்பு வண்டி உங்கள் பார்வையில்

தன்னிச்சையாக அமைந்ததோ, திட்டமிடப்பட்டதோ? தமிழுக்காக போராடிய தமிழர் குலதெய்வம் கருவூரார் அவர்களே காப்பு செய்யுங்கள்! வாழ்வதற்கு ஏற்ற வகைமைநாடாய் உலகம் போற்றிக் கொள்ளும் பின்லாந்து நாட்டிலிருந்து, இந்த தீயணைப்பு பாதுகாப்பு வண்டி வாங்கப்பட்டுள்ளது. இங்கு வரவழைக்கப்பட்டுள்ள இந்த வண்டி, உங்கள் பார்வையில் நிறுத்தப்பட்டுள்ளது.

18,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: நீரியல் அழுத்தத்தில் செயல்படக்கூடியது. தீயணைப்பு மற்றும் மீட்புத்துறைக்காக பின்லாந்து நாட்டிலிருந்து ரூ.17 கோடி மதிப்பில் இந்த தீயணைப்பு பாதுகாப்பு வண்டி வாங்கப்பட்டுள்ளது. இங்கு வரவழைக்கப்பட்டுள்ள இந்த வண்டி, பெரியகோயில் வளாகத்தில் மூலவர் விமான கோபுரத்தின் பின்புறம் உள்ள கருவூரார் கோட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டுள்ளது.

திருமூலர் எழுதிய திருமந்திரமே தமிழர் ஆகமம் எனப்படுகிறது. திருமூலர் அடிகள் சேக்கிழாரால் புகழ்ந்து பேசப்பட்ட 63 நாயன்மார்களுள் ஒருவரும், பதினெண் சித்தர்களுள் ஒருவரும் ஆவார். திருமூலர் வரலாற்றை நம்பியாண்டார் நம்பிகள் திருத்தொண்டர் திருவந்தாதியில் சுருக்கமாய்க் கூறுகிறார். இவர் வாழ்ந்த காலம் இன்றைக்கு ஏழாயிரத்திற்கு முன்பாகச் சொல்லப்படுகிறது. சைவத்திருமுறை பன்னிரண்டினுள் பத்தாவது திருமுறையாய்த் தொகுத்துள்ளனர்.

சோழமன்னன் இராசராசனிடம்- தஞ்சைப் பெரிய கோயிலை முழுக்க முழுக்க ஆகமவிதிப்படியே முன்னெடுத்தோம். இந்தக் கோயிலுக்கான குடமுழுக்கை தமிழிலேயே முன்னெடுக்க வேண்டும் என்று போராடியவர். தமிழர் குலதெய்வமாக தஞ்சை பெரிய கோயிலில் குடி கொண்டிருக்கிற கருவூரார் ஆவார். அவருடைய கோரிக்கை இற்றை அதிமுக அரசால் பகுதியாக முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. கருவூரார் இந்த குடமுழுக்கு நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு வழங்கி அருளவேண்டும். 

தஞ்சாவூர் பெரியகோயில் குடமுழுக்கு விழாவுக்காகப் சிறப்புநிலையாக இந்த வண்டி கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள சுழல் மேசையுடன்கூடிய ஏணி, 104 மீட்டர் நேராகவும் 55 மீட்டர் பக்கவாட்டிலும் செல்லக்கூடியது. அதாவது, இதன்மூலம் 300 அடி உயரம் வரை செல்ல முடியும்.

தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு விழாவுக்காக, 300 அடி உயர ஏணியுடன்கூடிய அதிநவீன தீயணைப்பு வண்டி தஞ்சாவூருக்கு முதன்முறையாக வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. தீ விபத்து ஏற்படுவதைத் தவிர்க்கவும், உயிரைக் காக்கவும் இந்த அதிநவீன வண்டி கொண்டு வரப்பட்டதாக விழாக் குழுவினர் தெரிவித்தனர்.

இருபத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற தஞ்சாவூர் பெரியகோயில் குடமுழுக்கு கருவூரார் கடுஞ்சீற்றப்பதிவு (சாபம்) குறித்து கவலை கொள்ளாமல், சமஸ்கிருதத்திலேயே முன்னெடுக்கப்பட்டது. அப்போது, யாகசாலைப் பந்தலில் ஏற்பட்ட தீவிபத்தால் சுமார் 48 பேர் வரை உயிரிழந்தனர். பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய அந்தச் நிகழ்வுக்குக் காரணம், பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாகச் செய்யாததே என்று சொல்லப்பட்டது. இந்த முறை எந்த ஒரு சிறு எதிர்வினையும் ஏற்படாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தஞ்சாவூர் பெரியகோயில் குடமுழுக்கு விழா வரும் புதன் கிழமை நடைபெற உள்ளது. இதற்காக ஒவ்வொரு பணியும் மாவட்ட நிர்வாகத்தால் கவனமுடன் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, யாகசாலைப் பந்தல் பெரியகோயில் அருகே உள்ள பெத்தண்ணன் கலையரங்கத் திடலில் 11,900 சதுரஅடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், யாகசாலைப் பந்தலில் 8 இடங்களில் தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கக்கூடிய உபகரணங்களுடன் எந்நேரமும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, யாகசாலைப் பந்தலுக்கு சில மீட்டர்கள் தொலைவில் உள்ள சிவகங்கைப் பூங்கா வளாகத்தில் தீயணைப்புத்துறையினரின் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, 2 தீயணைப்பு வண்டிகள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், சுழல் மேஜையுடன்கூடிய ஏணியைக் கொண்ட அதிநவீன தீயணைப்பு வண்டி சென்னையிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. மூலவர் விமானக் கோபுரம் 216 அடி உயரம் (தமிழில் உயிர்மெய் எழுத்துக்களின் எண்ணிக்கை) கொண்டது. குடமுழுக்கின்போது, மூலவர் கோபுரத்தில் சிவாச்சாரியார்கள், ஓதுவார்களுடன் தீயணைப்பு வீரரும் செல்ல உள்ளனர். இவர்களுக்கு ஏதாவது மயக்கமோ அல்லது வேறு ஏதேனும் சிக்கலோ ஏற்பட்டாலோ, இரும்புப் படிக்கட்டுகளின் வழியாகக் கீழே இறக்கிக் கொண்டுவருவதற்கு சிரமம் ஏற்படும். அப்படி ஏதாவது விபரீதம் ஏற்பட்டால், பாதிக்கப்பட்டவர்களைச் சுழல் மேசையுடன்கூடிய ஏணியின் உதவியுடன் கீழே கொண்டு வந்துவிடலாம்.

இதுகுறித்து திருச்சி மண்டல தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை துணை இயக்குநர் மீனாட்சி விஜயகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், தஞ்சாவூர் பெரியகோயில் குடமுழுக்கு விழாவுக்காகப் சிறப்புநிலையாக இந்த வண்டி கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள சுழல் மேசையுடன் கூடிய ஏணி, 104 மீட்டர் நேராகவும் 55 மீட்டர் பக்கவாட்டிலும் செல்லக்கூடியது. அதாவது, இதன்மூலம் 300 அடி உயரம் வரை செல்ல முடியும். விமானக் கோபுரத்தின் உயரம் 216 அடிகள். ஆனால், இந்த வண்டியில் உள்ள ஏணி 300 அடி வரை செல்லும் என்பதால் இதைத் தேர்வுசெய்தோம்.

மேலும், இதில் தண்ணீர் பீய்ச்சி அடிக்கக்கூடிய வசதி உள்ளது. ஏதாவது திடீரென தீ விபத்து ஏற்பட்டால், உடனே அந்தத் தீயை அணைக்க முடியும். உயிரைக் காக்கவும், தீயை அணைக்கவும் இந்த வண்டி பயன்படுத்தப்படும். யாகசாலையில் திரி, எண்ணெய் உள்ளிட்ட தீ பற்றக்கூடிய பொருள்கள் பயன்படுத்தப்படும் என்பதால், எளிதில் தீ பற்றாமல் இருக்கக்கூடிய வண்ணம் பந்தலில் பூசப்பட்டுள்ளது. மேலும், சிவகங்கைப் பூங்கா குளத்திலிருந்து தண்ணீர் எடுப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.