09,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: 'தமிழர்களே நாங்கள் இருக்கிறோம்' என்று ராகுல்காந்தி கீச்சுப் பதிவிட்ட நிலையில் தேசிய தலைவர்கள் கவனம் தூத்துக்குடி பக்கம் திரும்புகிறது. மமதா பானர்ஜி நாளை தூத்துக்குடி வருகிறார். காவல்துறையினர் திட்டமிட்டு துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட தூத்துக்குடிக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி நாளை வருகை தர உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மமதா வருகை தந்தால் தொடர்ந்து ராகுல் காந்தி உள்ளிட்டோரும் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தேசிய அளவில் தூத்துக்குடி பயங்கரம் கவனம் ஈர்க்க தொடங்கியுள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,796.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



