Show all

கமல் மீது வழக்குப்பதிவு! துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை சந்தித்தாராம்

09,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கானோர் கூடி நடத்திய பேரணியில் தமிழ்மக்கள் இனி போராடவே கூடாது என்பதற்காக சல்லிக்கட்டுப் போராட்டத்தின் இறுதியில் போராட்டத்தை அசிங்கப் படுத்த மேற்கொண்ட சூத்திரத்தை மேற்கொள்ளும் வகையாக திட்டமிட்;டு காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். 

இதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். ஏறத்தாழ 70 பேர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை கமல்ஹாசன் இன்று சந்தித்தார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், அரசாட்சி உள்ளவர்களுக்கு மனசாட்சி இருக்குமேயானால் அவர்கள் பதவி விலக வேண்டும் என தெரிவித்தார். இதற்கு முன்னதாக துப்பாக்கிச்சூடு நடத்த அனுமதி அளித்து ஆணை பிறப்பித்தது யார் என கமல்ஹாசன் கேள்வி எழுப்பியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கமல்ஹாசன் மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்த வகைக்காக அவர் மீது தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,796. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.