20,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பெரியார் அவர்கள் இயற்கையெய்தி 46 ஆண்டுகள் ஆகின்றன. பெரியார் அவர்கள்: இந்த மண்ணில் பக்தியின் பெயரால், தமிழ் மக்கள் மீது திணிக்கப் பட்ட ஆரியர் ஆதிக்கத்தை கடுமையாக எதிர்த்தார். திமுக: தமிழ் மக்கள் மீது திணிக்கப் பட்ட ஹிந்தி ஆதிக்கத்தை எதிர்த்தது. ஹிந்தியும், ஹிந்துத்துவாவும் தமிழர் மீதாக ஆரியர்கள் முன்னெடுக்கும் ஆதிக்க அதிகாரங்கள் என்பதை ஒவ்வொரு தமிழனுக்குள்ளும் உள்ளொளியாக உணர வைத்தன திராவிட இயக்கங்கள். ஆனாலும் தீபாவளி போன்ற மிகச் சில விழாக்களை, புராணப் புளுகுகளை புறந்தள்ளி விட்டு, பட்டாசு கொளுத்தும், பலகாரங்கள் சாப்பிடும் விழாவாகக் கொண்டாத்தான் செய்தனர் தமிழர். காங்கிரஸ் கட்சி ஆரியர்களின் ஹிந்தி ஆதிக்கத்திற்கு சோரம் போகிற கட்சி என்றால், பாஜக ஆரியர்களின் ஹிந்துத்துவா ஆதிக்கத்திற்கு சோரம் போகிற கட்சியாக முன்னெடுக்கப் பட்டு வருகிறது. சில கிளை அமைப்புகள், வேறுவகையான கோணத்தில் தமிழர்கள் மீது ஹிந்தியையும், ஹிந்துத்துவாவையும திணித்து வருகின்றன. அவ்வாறாக ஹிந்துத்துவா திணிப்பை வேறுவகையான கோணத்தில் தமிழகத்தில் முன்னெடுக்கும் அமைப்புதான் ஈஷா யோகா மையம். இந்த அமைப்பு இன்று ஆரியர்களால் கொண்டாடப் பட்டு வரும் மஹாசிவராத்திரி விழாவை கடந்த 25 ஆண்டுகளாக தமிழர்களும் கொண்டாட, தமிழர்கள் மீது ஓர் கற்பனையான ஈர்ப்பைத் திணித்து வருகிறது. நடப்பாண்டில் மாண்புமிகு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், ஈஷா மஹாசிவராத்திரி விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வருகை தருகிறார். இவர்களும் தமிழர் நடுகல்லை, லிங்கமாகவே உருவகிக்கிறார்கள். (லிங்கம் என்பது வடமொழிச் சொல் அதற்கான பொருளை ஆரியர்களிடமோ, திராவிட இயக்கத்தினரிடமோ கேட்டு தெரிந்து கொள்ளவும்.) அதுவும் தியானலிங்கம் என்று கொண்டாடுகிறார்கள். சத்குருவின் அருளுரை, சக்திவாய்ந்த நள்ளிரவு தியானம், மந்திர உச்சாடனைகள், லிங்க பைரவி மஹா யாத்திரை, பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து வரும் தலைசிறந்த கலைஞர்களின் பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள், சவுண்ட்ஸ் ஆப் ஈஷா குழுவினரின் இசை நிகழ்ச்சிகள் என, பல்வேறு அம்சங்கள் இடம் பெறுகின்றன. குறிப்பாக, தேசிய விருது வென்ற பிரபல இசையமைப்பாளர் அமித் திரிவேதி, பிரபல பின்னணி பாடகர்கள் ஹரிஹரன், கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்று இசை விருந்து படைக்க உள்ளனர். வீதி நாடகங்கள், பல்வகை சேலை உடுத்தும் பயிற்சி, பல மாநில உணவு அரங்கங்கள் உட்பட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மக்களின் கண்ணை கவரும் விதமாக ஆதியோகி குறித்த பிரத்யேகமாக லேசர் ஷோ ஒன்றும் நடத்தப்பட உள்ளது. ருத்ராட்ச பிரசாதம் ஆதியோகி ஒரு வருடமாக அணிந்திருந்த ருத்ராட்சம், புனிதமான மஹாசிவராத்திரி நாளன்று ஈஷா மையத்துக்கு நேரில் வருபவர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதை பூஜை அறையில் வைக்கலாம், விசேஷ நாட்களில் அணிந்து கொள்ளலாம். இந்த ருத்ராட்சம், சிவனருள் பெற துணை நிற்கும். சர்ப்ப சூத்திரம்மஹாசிவராத்திரி நாளன்று, ஈஷா மையத்துக்கு நேரில் வருபவர்களுக்கு, செம்பினால் செய்யப்பட்ட சர்ப்ப சூத்திரம் பிரசாதமாக வழங்கப்படும். இதை இடதுகை மோதிர விரலில் அணிய வேண்டும். இந்தச் சூத்திரம் ஆயுட்காலத்தைப் பெருக்குகிறது, ஒருவருக்குள் சமநிலையை உண்டாக்குகிறது. ஆதியோகியின் அருள்பெற்று, ஒருவர் முக்தி நோக்கி செல்ல ஆதியோகி பிரதட்சணம் உற்ற துணையாய் இருக்கும். ஆதியோகி அன்னதானம் மஹாசிவராத்திரி அன்று, பக்தர்கள் ஆதியோகிக்கு அரிசிஅர்ப்பணிக்கலாம். இந்த அரிசி, அன்று கூடும் லட்சக்கணக்கான மக்களுக்கு அன்னதானமாக வழங்கப்படும். என்று புதிய கோணத்தில் கருது கோள்கள் கற்பிக்கப் பட்டு இன்று சிவராத்திரி விழா கோவையில் கொண்டாடப் பட்டுக் கொண்டிருக்கிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,081.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



