21,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலக வரலாற்றில் மிகப் பெருந்திருப்பமாக: அமைதி மற்றும் நல்லெண்ண அடிப்படையில், நிபந்தனை ஏதும் இல்லாமல், இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் விடுவிக்கப்படுவார் என்று இம்ரான்கான் அந்நாட்டு பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அதன்படி அவர் விடுதலை செய்யப்பட்டார். இதற்கு இம்ரான்கானுக்கு பாராட்டுக்கள் குவிந்தன. இந்தியா, பாகிஸ்தான் மற்றும் உலக நாடுகளில் இருந்து இம்ரான்கானின் நடவடிக்கையை மக்கள் கீச்சுவில் மற்றும் ஏனைய சமூகவலைதளங்களிலும் பாராட்டினர். இந்நிலையில் இம்ரான்கானுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அளிக்க வேண்டும் என்று பாகிஸ்தானில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தானில் சமூக வலைதளங்களில் இதுதொடர்பான கோரிக்கை முன் வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இம்ரான்கான் தனது கீச்சுப் பக்கத்தில், நோபல் பரிசு பெற நான் தகுதியானவன் இல்லை. 1.காஷ்மீர் மக்களது விருப்பப்படி அமைதி. 2.துணைக் கண்டத்தில் வளர்ச்சி. யார் ஏற்படுத்துகிறாரோ அவரே நோபல் பரிசு பெற தகுதி பெற்றவர் என்று பதிவிட்டுள்ளார். இரண்டும் இந்தியா குறித்தானது! சமூக அக்கறையா? குறும்பா என்று காலந்தான் தீர்மானிக்கும். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,082.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



