20,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: புல்வாமாவில் தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதலால் 44 நடுவண் ஆயுதக்காவல் படை வீரர்கள் பலியாகினர். இதற்கு காரணமான தீவிரவாதிகளுக்கான முகாம் பாகிஸ்தானில் இருப்பதாக இந்தியா கடந்த கிழமை பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு மிராஜ் 2000 போர் விமானத்தை பயன்படுத்தியிருந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானைச் சேர்ந்த விமானங்கள் இந்திய வான் எல்லையில் பறந்தன. இந்திய விமாப்படையை சேர்ந்த விமானி அபிநந்தன் மிக் 21 விமானத்தில் சென்று பாகிஸ்தான் விமானத்தை வீழ்த்தினார். பிறகு இவரும் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றதால், பாகிஸ்தான் படையினர் அபினந்தன் விமானத்தைச் சுட்டு வீழ்த்தினர். அபினந்தன் பாராசூட் உதவியுடன் கீழே குதித்தார். பாகிஸ்தான் ராணுவத்தினர். அவரை சிறைபிடித்தனர். ஆனாலும் பாகிஸ்தான் 3 நாட்களில் அவரை நல்லெண்ண அடிப்படையில், எவ்வித நிபந்தனையும் இல்லாமல் விடுவித்தது. இதனால் இவர் உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளார். இந்நிலையில் இவரின் பெயரில் கீச்சுவில் போலி கணக்குகள் உருவாகி வருகின்றன. இதனை நம்பி பலர் அந்த போலி கணக்குகளை பின்தொடர்ந்தும் வருகின்றனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,081.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



