20,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் நரோட்டம் மிஷ்ரா இன்று போபால் நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,900.-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,901
மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட இதழியலாளர்கள் மரணம் அடைந்தால் தற்போது அரசின் சார்பில் அவர்களின் குடும்பத்துக்கு அளிக்கப்படும் நிவாரணத்தொகையை ஒரு லட்சம் ரூபாயில் இருந்து நான்கு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் அறிவித்தார்.
இதழியலாளர்களின் வாகனங்கள், படக்கருவிகள் சேதம் அடைந்தால் தற்போது அளிக்கப்படும் இழப்பீட்டு தொகை ரூ.25 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரமாக உயர்த்தப்படும். அதிகபட்சமாக 25 லட்சம் ரூபாய் வரை வீட்டுக்கடன் பெறும் இதழியலாளர்களுக்கு வட்டித்தொகையில் 5 விழுக்காட்டை தொடர்ந்து ஐந்தாண்டுகளுக்கு மாநில அரசு ஏற்றுகொள்ளும்.
நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.திடிரென்று ஏன் இதழியலாளர்கள் மீது இவ்வளவு பாசம் நாடாளுமன்ற தேர்தல் காரணமா!
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



