உழவர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக செவ்வாய்க் கிழமை முதல் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிக்கப் பட்டுள்ளது. 17,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: டெல்லியில் உழவர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக வருகின்ற செவ்வாய்க்கிழமை முதல் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய பாஜக அரசு முன்னெடுத்துள்ள- உழவர்கள் கரும்புச் சட்டம் என்று அறிவுறுத்துகிற- வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் உழவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து ஹரியானா - டெல்லி எல்லையில் உழவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 35 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நேற்று பேச்சுவார்த்தை நடத்தியது. உழவர்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து ஆய்வு செய்ய உழவர்கள் சங்க பேராளர்கள் உட்பட 5 பேர் அடங்கிய குழுவை அமைக்க ஒன்றிய அரசு முன்மொழிந்தது. ஆனால், அதை உழவர்சங்க பேரளர்கள் ஏற்கவில்லை. கடந்த காலங்களில், அமைக்கப்பட்ட குழுக்கள் எந்த முடிவையும் எடுக்கவில்லை; தீர்வை தரவில்லை என தெரிவித்து, கருப்பு வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர். இந்த நிலையில், உழவர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக வருகின்ற செவ்வாய்க் கிழமை முதல் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்படுவதாக அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அறிவித்துள்ளது. முதல்கட்டமாக வட இந்தியா முழுவதும் செவ்வாய்க கிழமை லாரிகள் ஓடா. வேளாண் சட்டங்களை நீக்கம் செய்யாவிட்டால் நாடு முழுவதும் லாரிகள் நிறுத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



