ஒரு லிட்டர் ரூ26.34விலையுள்ள பெட்ரோல் எரிபொருளை ஒன்றிய பாஜக அரசு ரூ90க்கு விற்று நாட்டின் விலைவாசி உயர்வுக்கு வித்திடுவது புரியாத புதிராகப் பார்க்கப்பட்டு வருகிறது. இந்த முரட்டுத்தனமான நடவடிக்கை சரியா? துவறா? 17,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து வரும் காரணத்தால் போக்குவரத்தைச் சார்ந்து இருக்கும் அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது, இதில் பாமர மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி, பால் உட்பட அனைத்து அடங்கும். ஒரு லிட்டர் பெட்ரோல் வெறும் 26.34 ரூபாய்க்கு உற்பத்தி செய்யப்படும் நிலையில் மக்களிடம் எப்படி 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த அதிகப்படியான விலை வேறுபாட்டிற்கு என்ன காரணம் என்பது புரியாத புதிராகவே பார்க்கப்பட்டு வருகிறது. நாட்டின் முன்னணி பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை மற்றும் உற்பத்தி நிறுவனமாகத் திகழும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் இன்றைய விலை படி ஒரு லிட்டர் பெட்ரோலின் அடிப்படை விலை 26.34 ரூபாய். விற்பனையாளர்களுக்கு கொண்டு சேர்க்கும் விதமாக ஒரு லிட்டருக்கு சுமார் 37 காசுகள் சரக்குச் சுமை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் விற்பனையாளர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் 26.71 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் மீது கலால் வரியாக 32.98 ரூபாயும், மதிப்புக் கூட்டு வரியாக 19 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. விற்பனையாளர்களுக்குக் கொடுக்கப்படும் கழிவுத் தொகைக்கும் மதிப்பு கூட்டு வரி உண்டு. ஆக பெட்ரோல் மீது ஒன்றிய பாஜக அரசு 150 விழுக்காட்டில் இருந்து 200 விழுக்காடு வரை ஆதாயம் பார்க்கிறது.
பெட்ரோல் பங்க்-களில் விற்பனை செய்யப்படும் பெட்ரோலுக்கு ஒரு லிட்டருக்கு 3.65 ரூபாய் கழிவு கொடுக்கப்படுகிறது. இப்போது பெட்ரோல் அடக்க விலை ரூ30.36 ஆகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



