வட மாநிலங்களில் விடாது பெய்யும் அடைமழையால் கங்கை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கங்கைஆற்றின் தொடக்கமான ரிசிகேசம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. 338 மீட்டர் உயர சிவன் சிலை உட்பட. 28,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: வட மாநிலங்களில் விடாது பெய்யும் அடைமழையால் கங்கை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கங்கை செல்லும் பாதைகளில் உள்ள ஊர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அண்மையில் மும்பையில் ஏற்பட்ட பலத்த மழையால் மக்கள் ஊரை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது அதீத மழையால் கங்கையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கங்கைஆற்றின் தொடக்கமான ரிசிகேசம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. சுற்றுலா பயணிகள் ரிசிகேசம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ரிசிகேசத்தில் உள்ள பிரம்மாண்டமான சிவன் சிலை வெள்ள நீரில் மூழ்குமளவு 338 மீட்டர் உயரத்திற்கு வெள்ளம் புகுந்துள்ளது. அதை தொடர்ந்து உத்திரபிரதேசத்தின் பல பகுதிகளிலும், வாரணாசியிலும் கோவில்களுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் புனித யாத்திரை சென்ற பலர் தரிசனம் பெறாமலேயே திரும்பியுள்ளனர். மேலும் இன்னும் இரண்டு நாட்கள் தொடர்ந்து மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அரசாங்கங்கள் அறிவுறுத்தியுள்ளன. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,212.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



