நீண்ட காலம் மழையை எதிர் பார்த்து வறண்டிருந்த சென்னைக்கு ஒரு மகிழ்ச்சி செய்தியாக, குளிர்விக்க மழை வருகிறது என்றது நார்வே வானிலை மையம் அண்மையில். மழையும் வந்தது; சென்னையும் குளிர்ந்தது. தற்போது அதே நார்வே வானிலை மையம் வரும் வெள்ளிக் கிழமை சென்னைக்கு கன மழை உண்டு எனத் தெரிவித்திருக்கிறது. 28,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகத்தில் கடந்த 6 மாதங்களாக மழையில்லை. இதனால் நீர் நிலைகள் வறண்டு காணப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்தது. குறைந்த அளவிலான மழை என்றாலும் கோடை வெப்பத்தை தணித்தது. நேற்று சென்னையில் கிண்டி, வளசரவாக்கம், ராமாபுரம், தியாகராய நகர், வளசரவாக்கம், ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், மடிப்பாக்கம், போரூர் உள்ளிட்ட இடங்களில் நள்ளிரவு மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அது போல் வேலூர், விழுப்புரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கன மழை பெய்தது. இந்த நிலையில் நார்வே வானிலை மையம், சென்னைக்கு விட்டு விட்டு மழை பெய்திட வாய்ப்பு இருக்கிறது என்றும், வெள்ளிக்கிழமை கனமழை பெய்யும் என்றும், இது சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,212.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



