ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என, உச்ச அறங்கூற்றுமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி, மூத்த வழக்கறிஞர், பிரசாந்த் பூஷண் உள்ளிட்டோர், மனு பதிகை செய்தனர். அதற்கான தீர்ப்பு இன்று வருகிறதாம். 27,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரபேல் போர் விமானம் தொடர்பான வழக்கில், உச்ச அறங்கூற்றுமன்றம், இன்று தீர்ப்பு அளிக்கிறது. ஐரோப்பிய நாடான, பிரான்சிடமிருந்து, ரபேல் போர் விமானங்கள் வாங்குவதில் முறைகேடு நடந்துள்ளதாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், மற்றும் இதழியலாளர்கள் என பல்வேறு தரப்பினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இது தொடர்பாக, உச்ச அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என, உச்ச அறங்கூற்றுமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி, மூத்த வழக்கறிஞர், பிரசாந்த் பூஷண் உள்ளிட்டோர், மனு பதிகை செய்தனர். இந்த மனு, அண்மையில் விசாரணைக்கு வந்தபோது, நடுவண் அரசு சார்பில் அணியமான சொலிசிட்டர் ஜெனரல், கே.கே.வேணுகோபால் கூறுகையில், ரபேல்; ஆவணங்கள் திருடு போக பறி கொடுத்து விட்டதாக அரற்றினார். ஒருவேளை ரபேல் வழக்கில், மனுதாரர்கள் சார்பில் பதிகை செய்யப்பட்ட ஆவணங்கள், ராணுவ அமைச்சக அலுவலகத்தில் இருந்து திருடி, அறங்கூற்றுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்றார். இதற்கெல்லாம் தீர்ப்பாக உச்சஅறங்கூற்று மன்றம் என்ன தெரிவிக்கப் போகிறது என்பதை இன்று தெரிந்து கொள்ளலாம். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,118.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



