நடுத்தர மக்களை கொண்டாட வைக்கும் தரம், மற்றும் விலையுடன் இன்று மதியம் நம்மூர் கடைகளில் கிடைக்க விருக்கிறது சியோமி நிறுவனத்தின் புத்தம் புதிய ரெட்மி நோட் 7 மிடுக்குப்பேசி 27,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடுத்தட்டு மிடுக்குப்பேசி விரும்பிகள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த ரெட்மி நோட் 7 புரோ. சீனாவில் அறிமுகமாகி விற்பனையில் உள்ள நிலையில், இதன் விலை, சிறப்பம்சங்கள் என இணையத்தில் கசிந்த தகவல்கள் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதுவரையில் ரெட்மியின் பதிப்புகளில் இந்த ரெட்மி நோட் 7 ப்ரோ மிடுக்குப்பேசிகள்தாம் குறைந்த விலையில், அதிக சிறப்பம்சங்கள் கொண்டுள்ளன. ரெட்மி நோட் 7புரோ ஸ்மார்ட்போனின் விலை வெறும் 9,999 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 3 ஜிபி ரேம், 32 ஜிபி உள்ளடக்க சேமிப்பு உள்ளது. இதே பதிப்பில், 3ஜிபி ரேம், 64 ஜிபி உள்ளடக்க சேமிப்பு உள்ள நோட் 7 மிடுக்குப்பேசி 11,999 ரூபாய் ஆகும். 4ஜிபி ரேம், 64ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்ட ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் 13,999 ரூபாய் என்றும், 6ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்ட பதிப்பு 16,999 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 7 ப்ரோ ல் உள்ள அடிப்படை சிறப்பம்சங்கள்: 1.இரட்டை செறிவட்டை வசதி. 2.தொடுதிரை 6.3அங்குலம். 3.பின்பக்க படக்கருவி 48 உடன் 5 மொகபிக்சல் திறன் கொண்டது என்று சொல்லப் பட்டாலும் அது லென்சின் அடிப்படையானது அல்ல என்றும் வெறுமனே மென் பொருள் தொழில் நுட்பம் என்றும் பேச்சு ஓடுகிறது. மின்கலத்திறன் 4000எம்ஏஎச். அதிவேக மின்னேற்றம் செய்யும் வசதியும் உள்ளது இந்த மிடுக்குப்பேசியின் தரம் என்று நிறுவனம் பெருமிதம் காட்டுவது: பின்பக்கபடக் கருவி 48உடன் 5 மெகாபிக்சல் என்பதும், மின்கலத்திறன் 4000எம்ஏஎச் என்பதும் தான். பின்பக்கப் படக்கருவியைப் பொருத்த வரை நிறுவனம் காட்டும் பெருமிதத்திற்கான கெத்து இருக்காது என்ற பேச்சு ஓடுகிறது. மின்கலத்தின் கெத்து- வாங்கி அனுபவிக்கப் போகிறவர்களுக்குத்தான் வெளிச்சம். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,118.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



