Show all

தோல்வியில் பெற்ற பாடம்! தேசிய எதிரி பாஜகவை வீழ்த்த, மாநில எதிரி கம்யூனிஸ்ட்டுக்கு அழைப்பு விடுக்கும் மம்தா

வரலாற்றில் முதன்முறையாக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்கு அழைப்பு விடுத்துள்ளார் மம்தாபானர்ஜி. இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

12,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொள்கை அளவில் கூட்டணி வைத்திருந்தாலும் மக்களவைத் தேர்தலில் காங்கிரசுடன் மம்தா பானர்ஜி கூட்டணி வைக்கவில்லை. மம்தாவின் மாநில எதிரியான கம்யூனிஸ்ட், பாஜகவிற்கு மறைமுக ஆதரவு நல்கியது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் எதிர்பாராதவிதமாக பல இடங்களில் தோற்றுப் போனது திரிணாமுல் காங்கிரஸ். 

பா.ஜ.கவை வீழ்த்த திரிணாமுல் காங்கிரஸ், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிஸ் ஆகிய கட்சிகள் இணைந்து போராட வேண்டும் என்று மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார், தோல்வியில் கிடைத்த பாடமாக.

தனது மாநிலத்;தில், பாஜகவின் வளர்ச்சி மம்தாவை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில், இன்று சட்டமன்றத்தில் பேசிய மம்தா பானர்ஜி, ‘இந்தியாவின் அரசியல் சாசனத்தை பாஜக மாற்றி அமைத்துவிடும் என்ற அச்சம் எனக்கு உள்ளது. காங்கிரஸ், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து பாஜகவுக்கு எதிராக போராட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்’ என்று தெரிவித்தார்.

வரலாற்றில் முதன்முறையாக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்கு அழைப்பு விடுத்துள்ளார். இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,196.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.