# வேண்டாம் வெற்றி அருள்திரு இராமருக்கே! ஆம் இந்த #நோ டூ ஜெய் ஸ்ரீராம் கீச்சுவில் இந்திய அளவில் தலைப்பானது. ஆளும் நடுவண் அரசு மகிழும் வகையிலாக, வெற்றி அருள்திரு இராமருக்கே! என்ற முழக்கத்தின் கீழ் வன்முறைக் கூட்டம் இந்திய அளவிலாக கிளம்பிவிட்டது. 12,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஆளும் நடுவண் அரசு மகிழும் வகையிலாக, வெற்றி அருள்திரு இராமருக்கே! என்ற முழக்கத்தின் கீழ் வன்முறைக் கூட்டங்கள் இந்திய அளவிலாக கிளம்பிவிட்டன. பாஜக சொல்லும் புதிய இந்தியா என்பது வெறுப்புணர்வு அரசியல்தாம் என்றால் எங்களுக்கு புதிய இந்தியா வேண்டாம்; எங்கள் பழைய இந்தியாவைத் தாருங்கள் என்று கொந்தளித்துள்ளார் மாநிலங்களைவையில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் எம்.பி குலாம் நபி ஆசாத். ஜார்க்கண்ட் மாநிலம் கர்ஸ்வான் மாவட்டத்தில், கடந்த கிழமை 24 அகவை இளைஞர் அன்சாரியை, ‘ஜெய்சிறி இராம்’ என்று முழக்கமிடச் சொல்லி, மரத்தில் கட்டிவைத்து சுமார் 12 மணி நேரம் அடித்துள்ளனர். தாக்கப்பட்டதிலிருந்து 18 மணிநேரம் கழித்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அன்சாரி, சிகிச்சை பலனின்றி திங்கட் கிழமை உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்துக்கு எதிராக கடும் கண்டனக் குரல்கள் எழுந்துவந்தன. மாநிலங்களைவையில் பேசிய காங்கிரஸ் எம்.பி குலாம் நபி ஆசாத், உங்களுடைய புதிய இந்தியாவில் வெறுப்புணர்வு அதிகரித்துள்ளது என்று காட்டமாக கூறினார்.அன்சாரியை கம்பத்தில் கட்டிவைத்திருக்கும் புகைப்படம் காண்போரை கலங்கச்செய்தது. அடுத்ததாக மேற்குவங்கத்தில், இதே வகைக்காக ஒரு இளைஞர் தொடர்வண்டியிலிருந்து கீழே தள்ளிவிடப்பட்டுள்ளார். இந்தச் சம்பவங்களின் எதிரொலியாக, #நோ டூ ஜெய் ஸ்ரீராம் கீச்சுவில் இந்திய அளவில் தலைப்பானது. ‘மதத்தைக்கொண்டு அரசியல் செய்வதை நிறுத்தங்கள்’ என்று பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
ஜெய் ஸ்ரீராம் சொல்லச் சொல்லி இஸ்லாமியர்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்துவரும் நிலையில், நேற்று #நோ டூ ஜெய் ஸ்ரீராம் கீச்சுவில் இந்திய அளவில் தலைப்பானது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,196.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.