Show all

லெனோவா கே8கூடுதல் மிடுக்கு செல்பேசி இன்று அறிமுகம்

லெனோவா கே8கூடுதல் மிடுக்கு செல்பேசி இன்று காலை 11.30மணி அளவில் டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டுள்ளது இந்த லெனோவா கே8கூடுதல் மிடுக்கு செல்பேசி மாடல்.

இந்த மிடுக்குசெல்பேசி; பிளிப்கார்ட் வலைதளத்தில் எளிமையாக வாங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லெனோவா கே8கூடுதல் பொறுத்தவரை கருப்;பு மற்றும் தங்க நிற விருப்பங்களில் கிடைக்கும். இதன் விலைமதிப்பு ரூ.10,999ஆக உள்ளது. அதிக மக்கள் இந்த மிடுக்கு செல்பேசியை வாங்குவார்கள் எனக் கூறப்படுகிறது.

மாலி டி888 ஜிபியூ உடன் 3 ஜிபி ரேம் மற்றும் 2.6ஜிகாஹெர்ட்ஸ் டிகா-கோர் செயலி கொண்டிருக்கும் மற்றும் இந்த செல்பேசியில் ஆண்ட்ராய்டு அடிப்படையிலான 7.1.1 நௌவ்கட் கொண்டு இயங்கும்.

இந்த மிடுக்குசெல்பேசி 5.2அங்குல தொடுதிரை கொண்டுள்ளது, மேலும் கார்னிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு மற்றும் ஒல்லோபொபிக் பூச்சு போன்றவை இவற்றில் இடம்பெற்றுள்ளது.

லெனோவா கே8கூடுதல் மிடுக்குசெல்பேசி ஆனது 32ஜிபி- 64ஜிபி உள் சேமிப்பு என இரண்டு மாதிரிகளில் 128 ஜிபி வரை மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழங்குகிறது. 4000எம்ஏஎச் மின்கலம் கொண்டுள்ளது.

லெனோவா படக்கருவியைப் பொறுத்தமட்டில், எல்இடி பிளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் பின்பக்க படக்கருவி இவற்றுள் அடக்கம், மேலும்முன்புற படக்கருவி 5மெகாபிக்சல் கொண்டவையாக உள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.