Show all

ஆசிய கோப்பை கால்பந்து தகுதி சுற்று: இந்திய அணிக்கு மூன்றாவது வெற்றி

2019-ம் ஆண்டு ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று போட்டி தற்போது பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி தனது மூன்றாவது லீக் போட்டியில் மக்காவ் அணியை எதிர்கொண்டது. 

உலக தரவரிசையில் இந்தியா 96-வது இடத்திலும் மக்காவ் அணி 183-வது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது. முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை. மாற்று வீரராக களம் கண்ட இந்திய வீரர் பல்வந்த் சிங் 57-வது மற்றும் 82-வது நிமிடங்களில் கோல் அடித்தார். மக்காவ் அணி ஒரு கோல் கூட கடைசி வரை அடிக்க வில்லை. முடிவில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் மக்காவ் அணியை தோற்கடித்தது. இந்திய அணி தனது பிரிவில் தனது மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது.  சர்வதேச கால்பந்து போட்டியில் இந்திய அணி தொடர்ச்சியாக 11 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.