Show all

பிரபஞ்ச நகைச் சுவையாளர் விருதை மகேஷ் சர்மாவுக்கு வழங்க, ஆத்மாக்கள் முடிவு

இந்த ஆண்டின் மிகச் சிறந்த அனைத்து பிரபஞ்ச நகைச் சுவையாளர் விருதை மகேஷ் சர்மாவுக்கு வழங்க, உலகம் தோன்றியதிலிருந்து இன்று வரை உலகம் முழுவதும் வாழ்ந்து மடிந்த, தமிழகத்தின் கடை ஏழு வள்ளல்கள் உள்ளிட்ட கோடிக் கணக்கான வள்ளல்களின் தெய்வத்திருஉயிர்கள் (ஆத்மாக்கள்) அனைவரும் வெகுண்டெழுவதற்கு இந்தியாவின் நடுவண் கலாசார துறை இணையமைச்சர் மகேஷ் சர்மா காரணமாகி விட்டார்.

தெய்வத்திரு உயிர்கள்-

இன்னும் நாம் அமைதியாக இருந்தால் இந்தியாவில் பாஜக கட்சிகாரன்கள் இன்னும் என்னென்ன செய்வான்கள் என்றே சொல்ல முடியாது. அவன்கள் செல்லுகிற பொய்யை எல்லாம் பேமானிகளாக மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டு அவன்களும் ரீல் விட்டுக் கொண்டே இருக்கிறான்கள்.

இன்றைக்கு இந்திய நடுவண் கலாசார துறை இணையமைச்சர் மகேஷ் சர்மா மிகப் பெரிய பொய்யை கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் அள்ளி விட்டிருக்கிறான். அவனுக்கு இந்த ஆண்டின் மிகச் சிறந்த அனைத்து பிரபஞ்ச நகைச் சுவையாளர் விருதை வழங்கி இழிவு படுத்தா விட்டால் வள்ளல் என்பதற்கான பொருளையே-

எவன் நடு ராத்திரியில் மக்களுக்கு வரி போடுகிறானோ!

எவன் ஒட்டு மொத்த மக்களையும் ஆதார் என்ற அடிமைச் சங்கிலியில் பிணைக்கிறானோ!

எவன் மக்களுக்கு முந்தைய அரசுகள் வழங்கிய எரிவாயு மானியத்தை பிடுங்குகிறானோ!

எவன் மக்கள் இரவு பகலாக உழைத்து சம்பாதித்த அவர்களின் ஆதாயமான ரூபாய்தாளை செல்லாது என்று அறிவித்து சில பலரை கொலை செய்து மக்களை அல்லல் படுத்துகிறானோ!

எவன் ஐட்ரோகார்பன், நீட், உணவு பாதுகாப்புச் சட்டம், என்று வகைவகையாக திட்டம் போட்டு, புதிய இந்தியா பிறந்தது, புதிய இந்தியா பிறந்தது என்று மக்களை வாட்டி வதைக்கிறானோ அவனே வள்ளல் என்று பொருள் மாற்றி விடுவான்கள்.

என்று தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்களாம்.

இப்படி உலகம் தோன்றியதிலிருந்து இன்று வரை உலகம் முழுவதும் வாழ்ந்து மடிந்த, தமிழகத்தின் கடை ஏழு வள்ளல்கள் உள்ளிட்ட கோடிக் கணக்கான வள்ளல்களின் தெய்வத்திருஉயிர்கள் வெகுண்டெழுந்திருப்பதற்கான காரணம் இதுதான்-

நாட்டு மக்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்த பாடுபட்டு வரும் பிரதமர் நரேந்திர மோடி, நாட்டுக்கு கிடைத்த வள்ளல் என நடுவண் கலாசார துறை இணையமைச்சர் மகேஷ் சர்மா பாராட்டியுள்ளார்.

டில்லியில் நடைபெற்ற ‘நிலையான வளர்ச்சி (அழிவிற்கான அடிப்படை) குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:

பொருளாதாரத்தில் ஏற்படும் வளர்ச்சியே நாட்டின் உண்மையான வளர்ச்சி. அடித்தட்டு மக்கள் உள்ளிட்ட அனைத்து மக்களின் வாழ்க்கையையும் மேம்படுத்தவே நிலையான வளர்ச்சி.

பிரதமர் மோடி தலைமையிலான மோடி அரசு, அதற்குண்டான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

ஏழை மக்களுக்கு பலன்கள் அனைத்தையும் கொண்டு போய் சேர்க்கும் சேவையை பிரதமர் மோடி செய்து வருகிறார். தன்னலம் கருதாத உண்மைத் துறவி பிரதமர் மோடி. நாட்டுக்கு கிடைத்த வள்ளல் அவர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.