இந்தியாவின் மற்ற மற்ற கட்சிகள் போல, பாஜக கட்சியின் சார்பாக ஆட்சி பொறுப்பில் இருக்கிற முதல்வர்கள், தலைமைஅமைச்சர் மோடி, கட்சியின் முதன்மை பொறுப்பில் இருக்கிற அமித்சா கூட தனிப்பட்டு முடிவு எடுத்து, எதையும் செயல்படுத்திவிட முடியாது. பாஜகவை முன்னெடுக்கும் தலைமையே வேறு. 07,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5123: இந்தியாவின் மற்ற மற்ற கட்சிகள் போல, பாஜக கட்சியின் சார்பாக ஆட்சி பொறுப்பில் இருக்கிற முதல்வர்கள், தலைமைஅமைச்சர் மோடி கட்சியின் முதன்மை பொறுப்பில் இருக்கிற அமித்சா கூட தனிப்பட்டு முடிவு எடுத்து, எதையும் செயல்படுத்திவிட முடியாது. யோகி ஆதித்தியாநாத் முதல்வராக உள்ள உத்தரப்பிரதேச மாநில அரசும் ஒன்றிய அரசும் கொரோனா கையாண்ட விதத்தில் ஒன்றுக்கொன்று மாறி மாறி குறை கூறி மோதிக் கொண்டுள்ளனர். இதனால், யோகி அணி, மோடி அணி என இருவருமே அதிருப்தியடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், மோடி அணியின் அரவிந்த் குமார் சர்மா என்ற முன்னாள் இந்திய ஆட்சிப் பணித்துறை அதிகாரி அம்மாநில பாஜகவிற்குள் நுழைந்தார். கட்சியில் இணைந்த சில நாட்களிலேயே மாநில சட்ட மேலவையில் உறுப்பினரானார். அரவிந்த் குமார் சர்மாவை, மோடி மற்றும் அமித்சாவே உத்தரப்பிரதேச அரசியலுக்குள் நுழைத்ததாகவும், யோகி ஆதித்யநாத்தின் கட்டுக்கடங்கா அதிகாரங்களைக் குறைக்கவே உத்தரப்பிரதேச அரசியலுக்குள் அவர் நுழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதேநேரத்தில், யோகி ஆதித்யநாத், அரவிந்த் குமார் சர்மாவை தனது அமைச்சரவையில் சேர்க்க மறுத்துவிட்டதாகவும், இதனால் மோடியும் அமித்சாவும் யோகி ஆதித்யநாத் மீது அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த சூழலில் யோகி ஆதித்யநாத் டெல்லி சென்று தலைமைஅமைச்சர் மோடி உள்ளிட்டோரைச் சந்தித்தார். இதன்பிறகு தற்போது அரவிந்த் குமார் சர்மா உத்தரப்பிரதேச மாநில பாஜகவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் உத்தரப்பிரதேச பாஜக அமைச்சரும், மூத்த தலைவருமான சுவாமி பிரசாத் மவுரியா, உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு உத்தரப்பிரதேசத்தின் அடுத்த முதல்வரை பாஜக இறுதி செய்யும் எனத் தெரிவித்துள்ளார். இதனால் வரும் தேர்தலில் யோகி ஆதித்யநாத் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படமாட்டார் எனப் பேச்சுக்கள் எழுந்துள்ளன. மேலும் தேர்தலில் பாஜக வென்றால் அரவிந்த் குமார் சர்மா முதல்வராக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆம்! இந்தியாவின் மற்ற மற்ற கட்சிகள் போல, பாஜக கட்சியின் சார்பாக ஆட்சி பொறுப்பில் இருக்கிற முதல்வர்கள், தலைமைஅமைச்சர் மோடி, கட்சியின் முதன்மை பொறுப்பில் இருக்கிற அமித்சா கூட தனிப்பட்டு முடிவு எடுத்து, எதையும் செயல்படுத்திவிட முடியாது. பாஜகவை முன்னெடுக்கும் தலைமையே வேறு.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.