உலக நாடுகள் சில ஐம்பது விழுக்காட்டிற்கு மேல் தடுப்பூசி செலுத்திக்கொண்டு கொரோனாவில் இருந்து தம்மக்களைப் பாதுகாத்து வருகின்றன. இதே வகைக்கான இந்திய சராசரி நான்கு விழுக்காட்டைத் தாண்டவில்லை. சென்னையில், 8விழுக்காட்டு மக்கள் இரண்டு தடவைகள் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டுள்ளனர் என்பது, இல்லாத ஊருக்கு (பொறுப்பில்லாதவர்கள் ஒன்றிய ஆட்சியில்) இலுப்பைப்பூ சருக்கரையாக மகிழ்ச்சி. 07,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5123: சென்னையில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்ற இந்தியப் பெரு நகரங்களான மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் டெல்லி ஆகியவற்றை விட அதிகமாக உள்ளது. உலக நாடுகள் சில ஐம்பது விழுக்காட்டிற்கு மேல் தடுப்பூசி செலுத்திக்கொண்டு கொரோனாவில் இருந்து தம்மக்களைப் பாதுகாத்து வருகின்றன. ஆனாலும் இருதடவைகள் முழுமையாக தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டதில் உலக விழுக்காடு இன்னும் பத்தினைத் தாண்டவில்லை. இதே வகைக்கான இந்திய சராசரி நான்கு விழுக்காட்டைத் தாண்டவில்லை. இந்தப் பொறுப்பின்மை, ஒன்றியத்தில் ஆளும் பாஜக அரசை இரண்டாவது முறையும் தேர்ந்தெடுத்தன் விளைவே என்று அறிஞர் பெருமக்கள் விவாதித்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில், 8விழுக்காட்டு மக்கள் இரண்டு தடவைகள் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டுள்ளனர். இரண்டு தடவைகள் பெற்றவர்களின் விழுக்காடு மும்பையில் 4விழுக்காடு பெங்களூர் மற்றும் டெல்லியில் தலா 5விழுக்காடு, ஹைதராபாத்தில் 3விழுக்காடு. இதேநேரம், தடுப்பூசி குறித்த அச்சம் பெருமளவுக்கு இருந்த மாநிலம் தமிழ்நாடு. ஆனால், 45 அகவைக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தத் தொடங்கியது முதல் மக்கள் அதிக ஆர்வம் காட்டி தடுப்பூசி போட்டுக் கொண்டதன் விளைவாக, இப்போது நாட்டிலேயே அதிக தடுப்பூசிகளை போட்டுக் கொண்ட நகரமாகியுள்ளது சென்னை. குறைந்தபட்சம் ஒரு தடவை தடுப்பூசி பெற்ற நகர மக்கள் தொகையைப் பொறுத்தவரை, பெங்களூர் அதன் மக்கள்தொகையில் 29விழுக்காடு பேருக்கு தடுப்பூசி செலுத்தி முதலிடத்தில் உள்ளது. சென்னை 25விழுக்காடு, மும்பை 18விழுக்காடு, டெல்லி மற்றும் ஹைதராபாத் 16விழுக்காடுகள் ஆகிக நகரங்களில் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. சென்னையில், இதுவரை 18-44 அகவைக்குட்பட்டவர்களில் 24விழுக்காட்டு பேர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு தடவை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 45 முதல் 60 அகவைக்குட்பட்டவர்களில் 58விழுக்காட்டுப் பேர்கள் குறைந்தது ஒரு தடவை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். 60 அகவைக்கு மேற்பட்டவர்களில் 53விழுக்காட்டு பேர்கள் குறைந்தது ஒரு தடவை தடுப்பூசி போட்டுள்ளனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.