சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட ஓட்டுநர் உரிமங்கள் வைத்திருப்பதாகவும் அதை தடை செய்யும் வகைக்கு என்றும் ஆதார் எண்ணுடன் ஓட்டுநர் உரிமத்தை இணைக்க மோடி அரசு திட்டமிட்டுள்ளது. நடுவண் சட்டம், அறங்கூற்றுத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் இந்த தகவலைத் தெரிவித்தார். சட்டத்துக்குப் புறம்பாக தற்போது பலரும், ஒன்றுக்கும் மேற்பட்ட ஓட்டுநர் உரிமங்களை வைத்துள்ளனர். விதிகளை மீறும் போது ஒரு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டால் மற்றொன்றைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். போலி பெயர்களிலும் ஓட்டுநர் உரிமங்கள் வாங்கிக் கொள்கிறார்கள். எண்ணிம ஹரியாணா மாநாடு 2017 விழாவில் கலந்து கொண்டு பேசிய ரவி ஷங்கர் பிரசாத், ஆதார் என்பது எண்ணிம அடையாள அட்டையே தவிர, பரிமான அடையாள அட்டையல்ல. பரிமான அடையாளத்தை எண்ணிம அடையாள அடடை மூலம் உறுதி செய்து கொள்ளலாம். பண மோசடிகளில் ஈடுபடுவதைத் தடுக்கவே பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டம் தொடங்கப்பட்டது என்றும் தெரிவித்தார். இந்தியாவில் இதுவரை 18 கோடிக்கும் அதிகமான ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அரசு வெளியிட்ட புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. ஏற்கனவே, நடுவண் அரசின் மக்கள் மீதான கிடுக்கிப் பிடித் திட்டங்களுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. செல்பேசி எண்ணுடன் ஆதார் இணைப்பு மற்றும் பான் எண்ணுடன் ஆதார் இணைப்புப் பணிகளும் நடந்த வருகின்றன. இந்த நிலையில், ஓட்டுநர் உரிமத்தோடு ஆதார் எண் இணைப்பு குறித்த அறிவிப்பையும் விரைவில் எதிர்பார்க்கலாம்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



