Show all

ஈடுபாட்டின் உச்சத்தில் அனிருத்! கோலமாவு கோகிலா நயன்தாராவின் சிறப்பான வெற்றியில்

14,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: நயன்தாராவுக்கு கடந்த ஆண்டு டோரா, அறம், வேலைக்காரன் ஆகிய மூன்று படங்கள் வந்தன. அறம் படத்தில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை காப்பாற்றப் போராடும் மாவட்ட ஆட்சியராக நடித்த அவரது கதாபாத்திரத்துக்கு பாராட்டுகள் குவிந்தன. இந்த ஆண்டு அவர் கைவசம் அதிக படங்கள் உள்ளன. 'இமைக்கா நொடிகள்', 'கொலையுதிர் காலம்', 'கோலமாவு கோகிலா' ஆகிய மூன்று படங்களும் உருவாகி உள்ளன.

இதில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'கோலமாவு கோகிலா' படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இதில் 5 பாடல்களுக்கு இசையமைத்து விட்டதாகவும், மீதமுள்ள ஒர் பாடலுக்கு இசையமைத்து வருவதாகவும் அனிருத் கூறியிருக்கிறார். மேலும், 'கோலமாவு கோகிலா' படத்திற்கு மிகவும் மகிழ்ச்சியுடன் வேலை பார்ப்பதாகவும், அடுத்த மாதம் ஒரு பாடலை வெளியிட இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

கோலமாவு கோகிலா படத்தின் மீதான அனிருத் ஆர்வம், மக்களையும் தொற்றி எதர்பார்ப்பின் விளிம்பில் நிற்க வைத்திருக்கிறார் அனிருத்- தமிழக திரை ஆர்வலர்களை.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,770.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.