தென்னிந்தியாவில், கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை இழப்பதற்காக நடத்தப்பட்ட நாடகம் வெற்றிகரமாக நிறைவேறியது. இனி பாஜகவிற்குதான் வெளிச்சம். 07,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடைபெற்றது. கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகினர். இதனால் முதல் அமைச்சர் குமாரசாமி கடந்த கிழமை தனது அரசின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை பதிகை செய்தார். அந்த தீர்மானத்தின் மீதான விவாதம் சட்டமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இரவு 11 மணிக்கு மேலும் விவாதம் தொடர்ந்து நடைபெற்றது. இன்றும் காலை சட்டமன்;றம் தொடங்கியதும் தீர்மானம் தொடர்பாக விவாதம் நடைபெற்றது. இதற்கிடையே பெங்களூருவில் அடுத்த 48 மணி நேரத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இன்று மாலை 6 மணி முதல் தடை அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. அனைத்து மதுபானக் கடைகளும், குடிப்பகங்களையும் மூட உத்தரவிடப்பட்டது. நீண்ட நேர விவாதத்திற்கு பின்னர் கர்நாடக சட்டமன்றத்தில் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பின்னர் சட்டமன்ற உறுப்பினர்கள் பகுதி வாரியாக பிரிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடைபெற்றது. அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் மும்பையில் தங்க வைக்கப் பட்டிருக்கும் நிலையில், இந்த வாக்கெடுப்பு நடைபெற்றது. அவையில் காங்கிரஸ், மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் சட்டமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். பா.ஜனதா சட்டமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வியை தழுவியது. குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 சட்டமன்ற உறுப்பினர்களும் எதிராக 105 சட்டமன்ற உறுப்பினர்களும் வாக்களித்துள்ளனர். இதனால் குமாரசாமி அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. தென்னிந்தியாவில், கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை இழப்பதற்காக நடத்தப்பட்ட நாடகம் வெற்றிகரமாக நிறைவேறியது. இனி பாஜகவிற்குதான் வெளிச்சம். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,222.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



