இறந்த நிலத்தலைவர்களுக்காக, தமிழர்களால் அமைக்கப்பட்ட நடுகல், தொடக்க காலத்தில் குத்துக்கல் வகை நடுகல்லாக இருந்தன. இந்த வகை நடுகல்லைப் பார்த்த ஆரியர்கள் தொடக்கத்தில் லிங்கம் போலிருப்பதாக கிண்டல் செய்து, பின்னர் தமிழர் நடுகல் வழிபாட்டை லிங்க வழிபாடாகவே மாற்றினர். அந்த வகை நடுகல் ஒன்று கிருட்டினகிரியில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. 07,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கிருட்டினகிரியின் தொன்மையையும், பெருங்கற்கால எச்சங்களையும். வெளிக் கொண்டுவரும் நோக்கில், அரசு அருங்காட்சியகம் மற்றும் கிருட்டினகிரி வரலாற்று ஆய்வு குழுவினர் இணைந்து சுமார் 2500 ஆண்டு பழமையான நடுகல்லைக் கண்டுபிடித்துள்ளனர். கிருட்டினகிரி அடுத்த திப்பனப்பள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராமத்தில் சுமார் 2500 ஆண்டுகள் பழமையான நடுகல்லை கிருட்டினகிரி வரலாற்று ஆய்வு குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். மேலும் இது போன்ற குத்துக்கல் நடுகல், கிருட்டினகிரி மாவட்டத்தில் 8 இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 9வது இடமாகும் என தொல்லியல் துறை குழுவினர் கூறுகின்றனர். இறந்த நிலத்தலைவர்களுக்காக, தமிழர்களால் அமைக்கப்பட்ட நடுகல், தொடக்க காலத்தில் குத்துக்கல் வகை நடுகல்லாக இருந்தன. இந்த வகை நடுகல்லை பார்த்த ஆரியர்கள் தொடக்கத்தில் லிங்கம் போலிருப்பதாக கிண்டல் செய்து, பின்னர் தமிழர் நடுகல் வழிபாட்டை லிங்க வழிபாடாகவே மாற்றினர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,222.
சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த கல் குத்துக்கல் அல்லது நெடுங்கல் என அழைக்கப்படுகிறது. இந்த கல் எட்டு அடி உயரமும், நான்கு அடி சுற்றளவும் கொண்டுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



