Show all

3 லட்சம் கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகளுடன், ஏர் இந்தியா விமானம் சீனாவில் இருந்து புறப்பட்டது! இந்தியத் தூதர் தகவல்

கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகள், கொண்டு வருவதற்காக டெல்லியில் இருந்து ஏர் இந்தியா பி-787 விமானம் சீனாவின் குவாங்செய்க்கு புறப்பட்டுச் சென்றது. இந்த நிலையில் மொத்தம் 3 லட்சம் கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகளுடன் ஏர் இந்தியா விமானம் இந்தியா புறப்பட்டுள்ளதாக இந்தியத் தூதர் தெரிவித்துள்ளார்.

07,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: பரவிவரும் கொரோனாவை அறிந்து கொள்வதில் தாமதப்பட்டு வந்த நிலையில், அறிகுறி தெரியாத வீடுகளில் இருக்கும் பாதிக்கப்பட்டவர்கள் மூலம் இந்த நோய் சமூகப்பரவல் நிலையை அடையாமல் இருக்க, உடனடியாக கொரோனா தொற்றை அறிந்து கொள்ள, கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகள், நமக்கு கிடைத்த நல்வாய்ப்பாகும். 

இதில், பரிசோதனை முடிவுகள் 15 நிமிடத்திற்குள்ளாகவே கிடைக்கும். ஒரு நாளைக்கு நிறைய பேரின் ரத்த மாதிரிகளை சோதனை செய்யலாம். இந்த வகை கொரோனா பரிசோதனைப் பேழைகளைத் தயாரிக்க இந்தியாவில் மூன்று நிறுவனங்கள் முடுக்கிவிடப் பட்டுள்ளன.

அண்மையில் சீனாவில் இருந்து கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகள் 24000 எண்ணிக்கை தமிழகம் வந்தன. தமிழக நலங்குத்துறை அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் இந்தக் கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகளை பிரித்துக் கொடுத்தது. இதில், கொரோனாஆட்சிமை பட்டியலில் இருக்கும் மாவட்டங்களுக்கு கூடுதலாக இந்த கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கூடுதலாக கேட்பு வழங்கப்பட்டுள்ள தமிழகம் மற்றும் இராஜஸ்தான் மாநிலங்களுக்கான கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகளைக் கொண்டு வருவதற்காக டெல்லியில் இருந்து ஏர் இந்தியா பி-787 விமானம் சீனாவின் குவாங்செய்க்கு புறப்பட்டுச் சென்றது. மொத்தம் 3 லட்சம் கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகளுடன் ஏர் இந்தியா விமானம் இந்தியா புறப்பட்டுள்ளதாக இந்தியத் தூதர் தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.