விலை உயர்ந்த ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிளில் உச்ச அறங்கூற்றுமன்ற தலைமை அறங்கூற்றுவர் எஸ்.ஏ.பாப்டே அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியானது. அந்த மோட்டார் சைக்கிள், உள்ளூர் பாஜக பேரறிமுகர் ஒருவருக்குச் சொந்தமானது என்று செய்திகள் வெளிவந்தன. இது குறித்து வழக்கறிஞர் பிரசாந்த் பூசன் வெளியிட்ட கீச்சு அவரைக் குற்றவாளியாக்கியுள்ளது. 05,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: அறங்கூற்றுமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட வழக்கறிஞர் பிரசாந்த் பூசண், மன்னிப்புக் கோர மாட்டேன் என்று கெத்து காட்டியுள்ளார். விலை உயர்ந்த ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிளில் உச்ச அறங்கூற்றுமன்ற தலைமை அறங்கூற்றுவர் எஸ்.ஏ.பாப்டே அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியானது. அந்த மோட்டார் சைக்கிள், உள்ளூர் பாஜக பேரறிமுகர் ஒருவருக்குச் சொந்தமானது என்று செய்திகள் வெளிவந்தன. கொரோனா ஊரடங்கு நேரத்தில் நாக்பூரில் உள்ள ஆளுநர் மாளிகையில் உச்ச அறங்கூற்றுமன்ற தலைமை அறங்கூற்றுவர் எஸ்.ஏ.பாப்டே விருந்தினராகத் தங்கியிருந்தபோது, அந்தப்படம் எடுக்கப்பட்டதாகத் தெரியவருகிறது. அந்தப் புகைப்படத்தைத் தனது கீச்சுப் பக்கத்தில் வெளியிட்ட உச்ச அறங்கூற்றுமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த பூசண், “தேசத்தின் குடிமக்கள் நியாயத்தீர்ப்பைப் பெறுவதற்கான வாய்ப்பை மறுக்கும் வகையில் உச்ச அறங்கூற்றுமன்றத்தைப் பூட்டிவைத்துவிட்டு, பாஜக தலைவரின் மோட்டார் சைக்கிளில் முகக்கவசமோ, தலைக்கவசமோ அணியாமல் உச்ச அறங்கூற்றுமன்ற தலைமை அறங்கூற்றுவர் பயணம் செய்கிறார்" என்று குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக உச்ச அறங்கூற்றுமன்றம் தாமாக முன்வந்து பிரசாந்த் பூசணுக்கு எதிராக அறங்கூற்றுமன்ற அவமதிப்பு வழக்கைப் பதிவுசெய்தது. அந்த வழக்கு கடந்த முப்பது நாட்களுக்கு முன்பு அறங்கூற்றுமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு குறித்து பதில் அளிக்குமாறு பிரசாந்த் பூசணுக்கும் கீச்சு நிறுவனத்துக்கும் உச்ச அறங்கூற்றுமன்றம் கவனஅறிக்கை அனுப்பியது. அதன் பிறகு நடைபெற்ற விசாரணையின்போது, பிரசாந்த் பூசண் சார்பில் அணியமான வழக்கறிஞர் துஷ்யந்த் தாவே, பிரசாந்த் பூசண் கூறிய கருத்து, அறங்கூற்றுமன்றத்தின் தரத்தைத் தாழ்த்துவது ஆகாது என்று வாதிட்டார். இந்த வழக்கில், பிரசாந்த் பூஷண் குற்றவாளி என்று உச்ச அறங்கூற்றுமன்றம் கடந்த கிழமை தீர்ப்பு வழங்கியது. அப்போது, தண்டனை விவரம் தெரிவிக்கப்படும் நாளாக நேற்றைய நாளை தெரிவித்திருந்தது. பிரசாந்த் பூசணுக்கு நேற்று தண்டனை குறித்து அறிவிக்கப்படும் என்று சொல்லப்பட்டிருந்த நிலையில், உச்ச அறங்கூற்றுமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக தாம் தாக்கல் செய்துள்ள மறுசீராய்வு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் வரை, எனது தண்டனை குறித்து விசாரிக்கக்கூடாது என்று உச்ச அறங்கூற்றுமன்றத்திடம் பிரசாந்த் பூசண் வேண்டுகோள் வைத்திருந்தார். ஆனால், அவரது வேண்டுகோளை உச்ச அறங்கூற்றுமன்றம் நிராகரித்துவிட்டது. ஆனால், பிரசாந்த் பூஷண் தன் கருத்தை மறுபரிசீலனை செய்வதற்கு உச்ச அறங்கூற்றுமன்றம் 2-3 நாட்கள் கால வரையறை வழங்கியுள்ளது. அறங்கூற்றுமன்றத்தில் பிரசாந்த் பூசண் முன்வைத்த கருத்தாவது: அறங்கூற்றுமன்ற அவமதிப்பு வழக்கில் நான் குற்றவாளி என்பதைக் கேட்டு வேதனைப்படுகிறேன். எனக்கு தரப்படப்போகும் தண்டனை குறித்து நான் வேதனைப்படவில்லை. நான் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதற்காகவே வேதனைப்படுகிறேன். மக்களாட்சியையும் அதன் மாண்புகளையும் பாதுகாப்பதற்கு வெளிப்படையான விமர்சனம் என்பது கட்டாயம் என்று நம்புகிறேன். அறங்கூற்றுத்துறை சிறப்பாகச் செயல்படுவதற்கான முயற்சியாக கீச்சுவில் நான் கூறிய கருத்துகளைப் பார்க்க வேண்டும். அந்த கீச்சுவின் மூலம் உயர்ந்த கடமையை ஆற்றியதாக நான் கருதுகிறேன். மன்னிப்புக் கோருவது என்பதை, கடமை தவறியதாகக் கருதுகிறேன். நான் கருணை வழங்குமாறு கோரவில்லை. அறங்கூற்றுமன்றம் வழங்கக்கூடிய எந்தத் தண்டனையையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன், என்பதாகும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



