தமிழகத்தின் குடிநீர் தேவைக்கு 20 லட்சம் லிட்டர் தண்ணீரை உதவ முன்வந்திருக்கிறது கேரளா. 05,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சென்னைக்கு இயற்கை தந்த இனிமை மழையோடு, கேரளா தரும் ஓர் இனிய செய்தி: தமிழகத்தின் தண்ணீர் தேவைக்கு சிறுபங்களிப்பாக, 20 லட்சம் லிட்டர் தண்ணீரை உதவ கேரள அரசு முன்வந்துள்ளது. தமிழகத்தில் நிலவும் கடும் தண்ணீர் பஞ்சம் காரணமாக குடிநீருக்காக மக்கள் அல்லல் படும் நிலை உருவாகியுள்ளது. தலைநகர் சென்னையில் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. நல்ல மழை பெய்தால் ஒழிய தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்படாத சூழலே தற்போது நிலவுகிறது. இந்நிலையில், தமிழகத்தின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கேரள அரசு உதவ முன்வந்துள்ளது. சிறு பங்களிப்பாக 20 லட்சம் லிட்டர் தண்ணீரை திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு தொடர்வண்டி மூலம் அனுப்பிவைக்க அணியமாக உள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,189.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



