Show all

இணையவழி பண மோசடி! டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மகளிடம்

டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் ஹர்சிதாவிடம் இணையத்தில் பண மோசடியில் ஈடுபட்டவர் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

27,தை,தமிழ்த்தொடராண்டு-5122: டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின்  மகள் ஹர்சிதா பழைய சோபா ஒன்றை விற்பனை செய்வதற்காக பேரறிமுக விற்பனை தளமான ஓஎல் எக்ஸ்-ல் விளம்பரம் கொடுத்திருந்தார். இதனைப் பார்த்த இணைய மோசடி கும்பலைச் சேர்ந்த ஒருவர் ஹர்சிதாவை அணுகி சோபாவை வாங்குவதற்காக ஹர்சிதாவின் வங்கிக் கணக்கை வாங்கி அவரின் நம்பிக்கையைப் பெறுவதற்காக சிறிய அளவு பணத்தை செலுத்தியுள்ளார்.

பின்னர் கியூ ஆர் கோடு இணைப்பு ஒன்றை அனுப்பி வைத்து அதன்மூலம் ஹர்சிதாவின் வங்கிக் கணக்கில் இருந்து 34,000 ரூபாய் பணத்தை களவாடியுள்ளார்.

இந்த இணைய மோசடி குறித்து டெல்லி சுழியம் பிரிவு காவல்நிலையத்தில் ஹர்சிதா புகார் அளித்திருப்பதாகவும், இதுதொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.