01,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: குறைந்த காலத்தில் மிகப்பெரிய அளவில் வளர்ந்து நிற்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இன்றைய தமிழ்த் திரையுலகின் முன்னணி கதைத்தலைவனாக விளங்கி வருகிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் படங்களுக்குப் பிறகு மூன்றாவது முறையாக பொன்ராம் இயக்கத்தில் சமந்தா உடன் இணைந்து சீமராஜா படத்தில் நடித்துள்ளார். அடுத்ததாக இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் நயன்தாரா உடன் இரண்டாவது முறையாக இணைகிறார். மேலும் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் விஞ்ஞானக் கட்டுக்கதை படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் இவர் முதன்முறையாக சொந்தமாக தயாரிக்கும் படம் குறித்து அறிந்;;;து கொள்வதில் திரைஆர்வலர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். அந்தப் படத்தின் சுவரொட்டி இன்று வெளியாகியுள்ளது. படத்தின் பெயர் 'கனா' இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதைதலைவியாக நடிக்கிறார். அவருக்கு தந்தையாக சத்யராஜ் நடிக்கிறார். கிரிக்கெட் வீராங்கனையாக விரும்பும் மகளின் ஆசையை நிறைவேற்ற பாடுபடும் தந்தையின் கதைதான் கனா. மரகத நாணயம் படத்திற்கு இசையமைத்த திபு நினன் தாமஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சிவகார்த்திகேயனின் கல்லூரி நண்பர் அருண்ராஜா காமராஜ் இப்படத்தை இயக்கி வருகிறார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,788.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



