05,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கஜா புயல் பாதிப்பு நிவாரண நிதியை உடனடியாக அறிவிக்கக்கோரி உயர்அறங்கூற்றுமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்அறங்கூற்றுமன்ற கிளை கவனஅறிக்கை அனுப்பியிருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. நடுவண் அரசு வழக்கறிஞர் வாதாடுகையில், கஜா புயல் பாதிப்புக்கு தமிழகத்திற்கு எவ்வளவு நிதி வழங்கப்படும் என்பதை, உயர்மட்டக்குழுவால் இரண்டு கிழமைகளில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும். புயல் பாதிப்பு குறித்த இறுதி அறிக்கை நடுவண் துணை குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மாநில பேரிடர் நிவாரண நிதியில் உள்ள 1,277.62 கோடி ரூபாயை தமிழக அரசு பயன்படுத்தி கொள்ளலாம் என்றார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,007.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



